.
.

.

Latest Update

கள்ளாட்டம் திரைப்படத்தை பற்றி நடிகர் நந்தா பேசியது..


Audio launch of Nandha’s Kallattam launched by karthi – https://youtu.be/2TVoDTTP8nI ​

Actor Nan​d​a Talks about #Kallttam – https://www.youtube.com/watch?v=mmoJkuVAYrU

Director Ramesh Talks about #Kallttam – https://www.youtube.com/watch?v=3Qh8ooc4QfU

​”Kallattam” Official Trailer Link – ​ https://youtu.be/pGIC2SyKGYw​​

கள்ளாட்டம் திரைப்படத்தை பற்றி நடிகர்
நந்தா பேசியது
White house production சார்பாக ​சௌன்டியன்.G , ​பிரகாஷ்​.R​​,சுமன்.G ​ இப்படத்தை தயாரித்துள்ளார்​கள்​.
இப்படத்தை ரமேஷ் ஜீ ​​ஒளிப்பதிவு​ செய்து இயக்கியு​ள்ளார் இவர் ஏற்கனவே பல படங்களுக்கு ​​ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரண்ட்ஸ்,
புதுக்கோட்டையில் இருந்து சரவணன் ,
கிங் , ஆழ்வார் ,
போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர்- முதல்முறையாக இப்படத்தை இயக்கியுள்ளார் .
படத்தின் பெயர்
(கள்ளாட்டம்)
இக்கதை ஒரு முழுமையான போலீஸ் ஸ்டோரி .
நான் ஏற்கனவே வேலூர்மாவட்டம் போன்ற படங்களில் போலீஸ் ஸ்டோரியில் நடித்துள்ளேன் .
ஆனால் இக்கதை வழக்கமான சினிமாவில் வருகின்ற போலீஸ் ஸ்டோரி போல் இல்லாமல்,
இப்படக்கதை முழுமையாக மாறுபட்ட சினிமாவாக இருக்கும்,
நீங்கள்’ காவல் உடை அணிய தேவையில்லை,
மற்ற படங்களை போல் குடும்பம்,. செண்டிமென்ட் ” போன்ற காட்சிகள் இப்படத்தில் இல்லை
என படத்தின் கதையை 20 நிமிடத்தில் என்னிடம் விளக்கினார் இயக்குநர் ரமேஷ் ஜீ,
மேலும் அவர் கதை சொன்ன விதம் என்னிடம் முன்வைத்த கருத்து மிகவும் எளிமையாக இருந்தது “இக்கதையில் சொல்லக்கூடிய கருத்து ரொம்ப காலமாக நடந்துகொண்டு இருப்பவை மற்றும் நடக்க கூடிய குற்றங்களை எதிர்த்து பேசப்படுகிற கதையாகும்.
இப்படம் மொத்தம் 90 நிமிடம் மட்டும்தான் முதல் பகுதி 45 நிமிடம் இரண்டாம் பகுதி 45 நிமிடம் என்று பிரித்துள்ளார்கள்.
படத்தில் நிறைய பாடல்கள் கிடையாது ஒரே ஒரு பாடல் மட்டும்தான், அது ஒரு கலர்புல்லான கவர்ச்சி பாடலாகும்.
ஏன் காதல் பாடல்களை இப்படத்தில் வைக்கவில்லை என்றால் காதலுக்கு தொடர்புடைய எந்த ஒரு காட்சியும் இப்படத்தில் இல்லை என்பதுதான் காரணம்.
படத்தில்
கதாநாயகி தோன்றும் காட்சிகள் மிகவும் குறைவு
இப்படத்தில் கதை முழுவதும் மிகவும் விறுவிறுப்புடன் பயணிக்கும் ஆதலால் இயக்குநர் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
படத்தில் என்னோடு நடிகர் இளவரசன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்,
ஒருமுறை விசாரணைக்காக என்னிடம் பைல் ஒன்று வருகின்றது
அதை விசாரிக்கும் போது அதை சார்ந்து இக்கதை பயணிக்கும்.
படத்தில் வசனங்கள் மிகவும் குறைவு ஆனால் ஒவ்வொரு வசனங்களும் மிக வலிமையானது. இப்படம் ஆங்கில திரைப்படத்திற்கு நிகரான படமாக
இருக்கும் .
துவங்கிய 2 நிமிடத்தில் கதையினுள் உங்களை இப்படம் பயனிக்க வைக்கும்.
மேலும் இப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் அற்புதமாக வந்துள்ளது.
படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் ரமேஷ் ஜீ .
மொத்தம் 17 நாட்கள் படபிடிப்பு நடந்தது.
இயக்கம் ஒளிப்பதிவு என இரண்டையும் அழகாகவும்’ நேர்த்தியாகவும்’ செய்து முடித்தார்,இயக்குநர் ரமேஷ் ஜி
இத்திரைப்படம் அனைவரும் ரசிக்கும் வகையில் நல்ல ஒரு திரைப்படமாக அமையும் என்றார் நந்தா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles