.
.

.

Latest Update

காத்திருப்பவர்களைப் பற்றிய ‘காத்திருப்போர் பட்டியல்’ திரைப்படம்


Nanditaலேடி ட்ரீம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் பைஜா டாமின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘காத்திருப்போர் பட்டியல்’. இவர் ஏற்கனவே பரத் நடிப்பில் உருவான ‘யுவன் யுவதி’ என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் கதாநாயகனாகவும், ‘அட்டகத்தி’, ‘எதிர் நீச்சல்’, ‘முண்டாசுபட்டி’ போன்ற வெற்றி படங்களில் நடித்த நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘மைனா’, ‘கும்கி’, ‘மான் கராத்தே’, ‘காக்கிச்சட்டை’ போன்ற வெற்றி படங்களின் ஒளிப்பதிவாளரான சுகுமார். இத்திரைபடத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ராஜா ராணி’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘டார்லிங்’ போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த ரூபன் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார்.

‘முண்டாசுபட்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவருடைய முந்தைய அவருடைய படங்களின் பாடல்களை முறியடிக்கும் அளவுக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.

பாடல்களை யுகபாரதி, அருண் ராஜா, மற்றும் ஜிகேபி ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தில் இடம் பெற்றிருக்கும் 5 பாடல்களுமே தனித்தனி ரகம். காதல், காமெடி, நய்யாண்டி, சோகம், உற்சாகம் என்று ஒவ்வொரு ரகத்திலும் ஒவ்வொரு பாடலாம்.

கலை இயக்குனர் லால்குடி என். இளையராஜா. இவர் விஸ்வரூபம், உத்தமவில்லன், போன்ற படங்களுக்கு கலை வடிவம் தந்தவர். விஸ்வரூபம் திரைபடத்திற்காக தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷோபி மற்றும் நோபல் நடன இயக்கம் செய்துள்ளனர்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் பாலையா D. ராஜசேகர். இவர் இயக்குநர் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘மரியான்’ திரைப்படத்தில் இனண இயக்குநராக பணி புரிந்துள்ளார். மேலும் இயக்குநர்கள் டாக்டர் தாசரி நாராயண ராவ், சூர்யகிரண், S.D. ரமேஷ் செல்வன், ராஜகோபால், மன்மோகன் ஆகியோரிடத்திலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணி புரிந்துள்ளார்.

காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்திற்க்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக என நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள்தாம்.

ஒரு புதிய கதை களத்தில் பல்வேறு காரணங்களுக்காக காத்திருப்பவர்களை பற்றி கூறும் கதைதான் இந்த காத்திருப்போர் பட்டியல். இது ஒரு நாளில் ஒரு இடத்தில் பலதரபட்ட மனிதர்களுடன் நடைபெறும் சுவாரஸ்யமான காதல் கதை. இது போன்ற அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles