.
.

.

Latest Update

கோடைகால புத்துணர்ச்சி பயிலரங்கு – “மைன்ட் ஃப்ரெஷ் – பறக்கும் யானைகள்


பொதுத் தேர்வுகள் ஆரம்பித்துவிட்டன. இன்னும் சில நாட்களில் கோடை கால விடுமுறைகளும் ஆரம்பித்து விடும். நீண்ட விடுமுறையைப் மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று நாள் பயிலரங்கை வருடந்தோறும் “மைன்ட் ஃப்ரெஷ்” ஏற்பாடு செய்து வருகிறது. கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் “பறக்கும் யானைகள் ” என்ற இப்பயிலரங்கு “சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்” போன்ற இடங்களில் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பாடங்களை எளிய முறையில் அணுகக் கூடிய வழிமுறைகளை மேற்கத்திய பயிற்சி முறைகளுடன், நம்முடைய பாரம்பரியத்திற்கும் கல்வித் திட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இம்மூன்று நாள் பயிலரங்கை கீர்த்தன்யா வடிவமைத்துள்ளார். பள்ளிப் படிப்புடன், கலைத் திறன், விளையாட்டு, தன்முனைப்பு (Soft Skill) போன்ற பல்வேறு விஷயங்களிலும் பிள்ளைகள் ஓரளவிற்காவது தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய “Study Techniques, Time Management, Emotional management & Focus” போன்ற விஷயங்களை மூன்று நாள் பயிலரங்கில், அவர்களுக்கேற்ற வடிவில் பிரத்தியேகமாக கீர்த்தன்யா வடிவமைத்துள்ளார். 12 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளும் பயிற்சி இது.

கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற சிக்கலான பாடங்களை எளிய முறையில் புரிந்து கொள்ள இங்கு கற்றுக் கொள்ளும் டெக்னிக்கள் மிகுந்த பயனளிக்கும். பதின்பருவத்தில் மனக் குழப்பமும், கவனச் சிதரலும், அச்சட்டையும் அதிகமாகப் பிள்ளைகளிடம் வெளிப்படும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த பருவத்தில் தான் இடைவெளி அதிகமாக இருக்கும். பெற்றோர் – பிள்ளைகள் உறவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளரிளம் பருவத்தின் உந்துதலால் ஏற்படும் இன்ஃபேக்சுவேஷன் கூட இவர்களது கவனச் சிதறலுக்குக் காரணமாக அமையும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இவற்றில் இருந்து வெளியே வருவதற்கு NLP மற்றும் TA போன்ற சிறப்புப் பயிற்சிகளும் பயிலரங்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்ல இந்தியாவிலேயே NLP சார்ந்த முதல் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் இதுவே.

“Flying Elephants” மூன்று நாட்களுக்கு பிறகு நான் எவ்வள்ளவோ சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு எல்லாம், நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை நடை முறை படுத்த முடியாமல் தவிப்பேன், அதனாலேயே டென்ஷன் ஆக இருப்பேன். இப்போது படிக்கும் வழிமுறைகளை கற்றுக் கொண்ட பின், என்னுடைய முன்னேற்றம் எனக்கு மட்டும் இல்லை என் பெற்றோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. என்கிறார் காவியா என்னும் +2 படிக்கும் மாணவி.

வருகிற மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த பயிற்சி – சென்னையில் மூன்று இடங்களிலும், பிற மாவட்டங்களில் இரண்டு இடங்களிலும் நடை பெறுகின்றது. சென்னையில் தேதி மற்றும் இடங்கள்:

மார்ச் 27, 28, 29 – IIT சென்னை ரிசர்ச் பார்க், தரமணி
ஏப்ரல் 24, 25, 26 – IIT சென்னை ரிசர்ச் பார்க், தரமணி
மே 8,9,10 – திருப்பூர்
மே 15,16,17 – கோயம்பத்தூர்
மே 29, 30, 31 – AIEMA ஹால், அம்பத்தூர் தொழில் பேட்டை, அம்பத்தூர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles