.
.

.

Latest Update

சாதி வெறியால் காதல் படும் அவலம்தான் “வெள்ளை உலகம்”


unnamedஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்”
இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாசன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா, புருசோத் தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், சம்பத்ராம் மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் வெங்கடேசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக ஐரின், காவ்யா இருவரும் நடித்துள்ளனர்.வில்லியாக பொம்மி என்கிற பெண் அறிமுகமாகிறார்.

சாதி இன்றைய காலகட்டத்தில் காதலுடன் ஒன்றி எந்த விதத்தில் அரசியல் செய்து உலுக்கி கொண்டிருக்கிறது என்பதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
படத்திற்காக நாற்ப்பது லட்சம் செலவில் திருப்பூரில் இரண்டு கிராமம் பிரமாண்டமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கிராமம் படப்பிடிப்பு முடிந்தவுடன் சுற்றியுள்ள மக்களுக்கு அன்பளிப்பாக படப்பிடிப்பு குழு வழங்கியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் மிகபிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறுகிறார் இயக்குனர் உதயா ராமகிருஷ்ணன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles