.
.

.

Latest Update

சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் அர்பன்க்ளாப் ஈடுபட்டுள்ளது – தலைமை விருந்தினராக நடிகர் ஆரி


UrbanClap – சுற்றுசூழல் சுகாதாரம்! UrbanClap தனது சிஎஸ்ஆர் எனும் பெருநிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் அர்பன்க்ளாப் ஈடுபட்டுள்ளது

வெங்கடாபுரம் பகுதியைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க, மாநகராட்சிக்கு உறுதுணையாக நிற்கும் UrbanClap, இந்த சிஎஸ்ஆர் நடவடிக்கைக்கு தலைமை விருந்தினராக, திரைப்பட நடிகர் ஆரி அழைக்கப்பட்டுள்ளார்.

புதுதில்லி, ஆகஸ்ட்4, 2017: – இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் சேவைகளுக்கான சந்தைத் தளமான UrbanClap, தனது வருடாந்திர சிஎஸ்ஆர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மழைக்காலத்தில் கொசு ஒழிப்புப் பணிகளை சென்னையில் மேற்கொள்கிறது. சென்னை வெங்கடாபுரம் குடிசைப் பகுதியில் கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்கும் பொருட்டு, மாநகராட்சி மற்றும் தன்னார்வ இளைஞர்களின் துணையுடன் குடிசைப் பகுதியைச் சுற்றிலும் இந்தப் பணியை UrbanClap செயல்படுத்துகிறது. அத்துடன், இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் இந்நிறுவனம் செய்கிறது. இந்த சமூக நலப் பணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கோலிவுட் நடிகர் ஆரி, கொசு ஒழிப்புப் பணிகளில் நேரடியாக பங்கேற்கிறார்.

இந்த நடவடிக்கை குறித்து UrbanClap இணை-நிறுவனர் வருண் கேத்தான் கூறும்போது, “எமது வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களுக்காக பணியாற்றும் நிபுணர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே UrbanClap நிறுவனத்தின் முதல் குறிக்கோள். புகழ்பெற்ற பிராண்ட் ஆக இருக்கும் பட்சத்தில், மக்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பு. மற்ற அனைத்து வசதிகளைக் காட்டிலும் சுத்தமான, சுகாதாரமான சூழல் தான் இப்போதைய தேவை. குறிப்பாக மழைக்காலத்தில் கொசுக்களால் நோய்பரவாமல் தடுப்பது முழுமுதல் தேவையாக உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கு சுகாதாரமான சூழல் அமையவில்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் கொசுக்களால் டெங்கு, சிக்கன்குனியா உள்பட கொடிய நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு துணையாக நின்று, கொசுக்கள் ஒழிப்பில் பங்கெடுக்கிறோம், சுகாதாரத்தை பேணுவது குறித்து அப்பகுதி முழுக்க விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.” என்றார்.

இந்தியாவில் சமூக அக்கறையுடன் பல்வேறு நலப் பணிகளை மேற்கொள்ளும் சில நிறுவனங்களுள் UrbanClap முக்கியமான நிறுவனம். தனது சமூகப் பணிகளில் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் 6ம் தேதி (ஞாயிறு) காலை 8:30 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் இருக்கும் வெங்கடாபுரம் குடிசைப் பகுதியிலுள்ள தாலுக்கா சாலையில், (வார்டு எண்:171 மண்டலம் 13 அடையார்) இந்த கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

UrbanClap பற்றி:

இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் சேவைகளுக்கான சந்தை தளமான UrbanClap, புகைப்பட கலைஞர்கள், எலெக்டிரீஷியன்கள், வீடு சுத்தம் செய்பவர்கள் & பழுதுபார்ப்பவர்கள், யோகா & கிட்டார் பயிற்சியாளர்கள் உள்பட 97 வகைகளை தன்னுள் கொண்டு சேவைகளைச் செய்கிறது. உங்கள் வீட்டை அலங்கரிக்க, உங்கள் திருமண நாளில் கேண்டிட் படங்களை எடுக்க, உங்கள் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட, அல்லது ஆரோக்கியமாக வாழ..இது போன்ற எண்ணற்ற சேவைகளை விரல் நுனியில் கொண்டு வருகிறது UrbanClap. இந்தியாவில் மிக அதிகளவிலான முறைசாரா சேவைகள் சந்தையை, தொழில்நுட்பங்கள் கொண்டு எளிமையாக கட்டமைத்துள்ளது UrbanClap. மிகப்பெரிய ஆன்லைன் இ-காமர்ஸ் தளத்திலிருந்து தரமான பொருட்களை எளிதாக ஆர்டர் செய்து வாங்குவதைப் போல, நம்பகமான தொழில்நுட்ப நிபுணர்களை மிக எளிதாக அணுகுவதற்கு UrbanClap பாலமாக செயல்படுகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles