.
.

.

Latest Update

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா. நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான R.சுந்தர்ராஜன் பேசியது , நான் இயக்குநராக இருந்தும் என்னை விழாவை சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நன்றி. நேற்று என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு “ நீங்கள் விழாவை சிறப்பிக்க வேண்டும் வர வேண்டும் என்று கூறினார் “ நான் அதற்க்கு நாளை காலை நினைவுபடுத்துங்கள் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறினேன். இன்று காலை தொலைப்பேசி மூலமாக என்னை மீண்டும் தொடர்பு கொண்டு நினைவுபடுத்தினார். விட்டால் என் வீட்டிற்கு காரை அனுப்பி என்னை அழைத்து வந்திருப்பார் தலைவர் நாசர். அவர் மனதளவில் எப்போதும் நல்ல எண்ணங்களை கொண்டவர். எப்போதும் அவர் நல்லதே நினைப்பதால் அவருக்கு எப்போதும் நல்ல பெயரே இருந்து வருகிறது. இது தான் அவரை பற்றி கிசுகிசு வராததற்கு முக்கிய காரணம். தலைவராக இருப்பதற்கு நாசருக்கு எல்லா தகுதியும் உள்ளது என்றார் R.சுந்தர்ராஜன்.

விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது , அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் , இந்த தீபாவளியை அனைவரும் மாசற்ற தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்கத்தில் எங்களுக்கு டீ வேண்டும் என்றால் கூட எங்களுடைய காசில் தான் நாங்கள் வாங்கி சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு நாங்கள் சிக்கனமாக நடிகர் சங்கத்தில் இருந்து வருகிறோம். இந்த தீபாவளிக்கும் சென்ற தீபாவளியை போன்று சிறப்பாக அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது அதற்க்கு முக்கிய காரணம் நமது நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோர் தான். நாடக நடிகர்கள் பலர் நாங்களும் நிர்வாகத்துடன் இணைந்து தீபாவளி பரிசு வழங்குகிறோம் என்று கூறி எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் அவ்வாறு கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார் தலைவர் நாசர்.
விழாவில் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசியது , தீபாவளிக்கு அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி. பொருளாளர் கார்த்தி , நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோரும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்தனர். ராம்ராஜ் நிறுவனத்தினரின் உதவியால் தான் நாங்கள் இப்போது நடிகர்சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி சட்டையை வழங்கியுள்ளோம். நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். இதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம். தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் விரைவாக குணமடைய நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம் என்றார் பொது செயலாளர் விஷால்.

​ விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசியது , அனைவரும் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்ட நிதி திரட்ட சங்கத்தின் பொது செயலாளர் விஷால் மற்றும் பொது செயலாளர் கார்த்தி எப்போது இனைந்து நடிப்பார்கள் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள் ??.. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து தான் நடிகர் சங்கத்துக்கு நிதி அளிக்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் இருவரும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர்கள். அவர்கள் இருவரும் தனித்தனியாக படத்தில் நடித்து அவர்கள் பெறும் சம்பளத்தில் நடிகர் சங்கத்துக்கு நிதி அளித்தால் போதும். அப்படி நடிகர் சங்கம் ஒரு படம் தயாரித்தால் அதில் ஸ்டார் கிரிக்கெட்டில் பங்கேற்றது போன்று நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான நடிகர்கள் அனைவரும் நடிப்பார்கள் என்றார் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்.
விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் பேசியது , சென்ற ஆண்டு அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கியது போன்று இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பொது வாழ்க்கை என்று வந்தால் விமர்சனம் வர தான் செய்யும் , அதில் எது உண்மை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார் துணை தலைவர் கருணாஸ். ​
​​இவ்விழாவில் மூத்த நடிகர் நடிகைகளான சரஸ்வதி , கமலா , மணிஐயா , ஜெய்பாலையா , ஜெயராமன் ,டி.கே.எஸ். நடராஜன் மற்றும் 500 மேற்பட்ட உறுப்பினர்கள் தீபாவளி பரிசை பெற்று கொண்டனர். சிறப்பு விருந்தினர்களான நடிகர் ராஜ் கிரண் , இயக்குநர்
ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் இதனை வழங்கினர். இவ்விழாவில் ​
​செயர்க்குழு உறுப்பினர்கள் …..

குட்டி பத்மினி,
ஸ்ரீமன்,
உதய,
பசுபதி,
விக்னேஷ்,
ராஜேஷ்,
ஜூனியர் பாலய்யா, அயூப்கான், பிரேம்,
தளபதி தினேஷ்,
T.P.கஜேந்திரன், சிவகாமி , பாலதண்டபாணி, எம்.ஈ. பிரகாஷ்

நியமன செயர்க்குழு உறுப்பினர்கள்.
லலிதகுமாரி, மனோபாலா, ஹேமச்சந்திரன், அஜய்ரத்தினம்,
ஜெரால்டு , வேலூர் வாசுதேவன்,

​மற்றும் நடிகைகள் ரோகினி ,நீலிமா ஆகியோர் கலந்துகொண்டனர் ​

பதிவு எண். : 50/52 தோற்றம் : 1952
வாழ்க நமது சங்கம்! வளர்க நமது சங்க உறுப்பினர்கள்!!

சௌத் இந்தியன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன்
தென்னிந்திய நடிகர் சங்கம்
G-1, நந்தா அப்பாட்மெண்ட், எண்.21, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை – 17.
ஓராண்டு சாதனைகள்

2015 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பரிசு பொருட்கள்
நமது சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து அனைவருக்கும் வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அனைத்து மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் நமது செயற்குழு உறுப்பினர்கள் மூலம் இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

வெள்ள நிவாரண நிதி
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நமது சங்கம் சார்பில் ‘The Environment Foundation of India” என்ற NGO மற்றும் புவனகிரி தாசில்தார் மூலமாக தென்னிந்திய நடிகர் சங்கம் மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நமது சங்க உறுப்பினர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பொது மக்களுக்கும் அவர்களுக்கு அடிப்படை தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள், உணவு, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக நமது நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள திரு.ரஜினிகாந்த் (10 லட்சம்), திரு.கமல்ஹாசன் (15 லட்சம்), திரு.சூர்யா மற்றும் திரு.கார்த்தி (25 லட்சம்), திரு.விஷால் (10 லட்சம்), திரு.சத்யராஜ் (2 லட்சம்), திரு.சிபிராஜ் (25,000), திரு.சிவகார்த்திகேயன் (5 லட்சம்), திரு.தனுஷ் (5 லட்சம்), திரு.ரம்பா இந்திரகுமார் (5 லட்சம்), திரு.சூரி (1 லட்சம்), திரு.விக்ரம் (10 லட்சம்), திரு.ஜீவா (10 லட்சம்), திரு.பிரபு மற்றும் திரு.விக்ரம் பிரபு (5 லட்சம்), திரு.பாபி சிம்ஹா (1 லட்சம்), திருமதி.சரோஜா தேவி (5 லட்சம்), திரு.எம்.எஸ்.பாஸ்கர் (1 லட்சம்) ஆகியோர்கள் நன்கொடையாக வழங்கிய ரூபாய் 1 கோடி 10 லட்சத்தி 25 ஆயிரம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 11.01.2016 அன்று தலைமை செயலகத்தில் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வரிவிலக்கு சான்றிதழ் 80G
முன்னாள் நிர்வாகிகள் வருமான வரித்துறைக்கு வரவு, செலவு கணக்கு முறையாகவும், முழுமையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால் 80G வரிவிலக்கு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால், நமது சங்க அறக்கட்டளைக்கு நன்கொடை செய்து வருபவர்களுக்கு வரிவிலக்கு சான்றிதழ் கொடுக்கமுடியாத சூழ்நிலை இருந்ததால், யாரும் நன்கொடை செய்ய முன் வரவில்லை. நமது சங்க பொருளாளரும், டிரஸ்ட்டியுமான திரு. SI.கார்த்தி அவர்கள் பொறுப்பேற்ற 45 நாட்களில் 80G வரிவிலக்கு சான்றிதழ் பெற்று தந்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்களின் முழுவிவரப்பட்டியல் (Database)
நமது சங்க அலுவலகத்தில் உறுப்பினர்களின் முழுவிவரப்பட்டியல் (Database) சரியாகவும், முழுமையாகவும் இல்லாத காரணத்தால் உறுப்பினர்களுக்கும், நிர்வாகத்திற்கும் கடித போக்குவரத்துகள் இல்லாத சூழ்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையை போக்க உறுப்பினர்களின் முழுவிவரப்பட்டியல் (Database) சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து இன்று 80% விழுக்காடு செயல்படுத்தி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் (Medical Camp)
நமது சங்க ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு 3 சக்கர வண்டி, காது கேட்கும் கருவி வழங்கப்பட்டு வருகிறது.
நமது சங்க வயதான கண் பார்வை குறைபாடு உள்ள உறுப்பினர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலயம் ஆப்டிக்கல்ஸ் சென்டர் மூலம் கண் கண்ணாடி வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

SPI Cinemas ஒப்பந்தம் ரத்து
கடந்த நிர்வாகத்தால் SPI Cinemasக்கும், நடிகர் சங்கத்திற்கும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு 2 கோடி 48 லட்சம் ரூபாயை SPI Cinemas நிறுவனத்திற்கு வழங்க 08.02.2016 அன்று மதியம் 2 மணியளவில் நமது சங்கத்திற்கு SPI Cinemas போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்களின் குடும்பத்திற்கு ACS மருத்துவ அடையாள அட்டை
நமது சங்க உறுப்பினர்களுக்கு குருதட்சணை திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை வழங்க சென்னை ACS மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி பெற்று தந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

62ஆம் ஆண்டு பொதுக்குழுவில் பொற்கிழி வழங்கியது
62ஆம் ஆண்டு பேரவை கூட்டத்தில் நடிகபூபதி திரு.பி.யூ.சின்னப்பா அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.1,00,000/- காசோலையும், பொற்கிழியும், கேடயமும் நினைவு பரிசு வழங்கி பாராட்டு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
62ஆம் ஆண்டு பேரவை கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி விவரம் தெரிந்த மூத்த கலைஞர்களுக்கு மாவட்ட நாடக நடிகர் சங்கம் மற்றும் மாவட்ட நியமன செயற்குழு உறுப்பினர்களின் பரிந்துரையின்படி 15 மூத்த உறுப்பினர்களுக்கு தலா ரூ.20,000/- காசோலையும், பொற்கிழியும், கேடயமும் நினைவு பரிசு வழங்கி பாராட்டு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நட்சத்திர கிரிக்கெட்
ஏப்ரல் 17ந்தேதி நடந்த நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு MAC விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டது.
நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் ஆட்ட நாயகனாக வெற்றி பெறும் நபருக்கு கார் ஒன்றை பரிசாக அளிப்பதாக THE TRUE SAI WORKS (சேலம்) நிறுவனம் தெரிவித்ததை தொடர்ந்து, அன்று வெற்றி பெற்ற திரு.விக்ராந்த் அவர்களுக்கு காரை பரிசாக அளித்தனர். அந்த காரை அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு செயற்குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SIP MEMORIAL TRUST நிதி உதவி
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

குருதட்சணை திட்டத்தின் கீழ் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம்
1. குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களுக்கு 80 வயதிற்கு மேல் உள்ள 72 உறுப்பினர்களுக்கு ரூ.2000/- வீதம் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

2. குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களுக்கு 70 வயது முதல் 79 வயது வரை உள்ள 91 உறுப்பினர்களுக்கு ரூ.1000/- வீதம் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

குருதட்சணை திட்டத்தின் கீழ் மாற்ற திறனாளி உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம்
குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களில் உள்ள மாற்று திறனாளிகள் 12 நபர்களுக்கு ரூ.2000/- வீதம் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

குருதட்சணை திட்டத்தின் கீழ் உறுப்பினர்களின் இலவச கல்வி பட்டபடிப்பு
குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களின் குழந்தைகளில் +2 முடித்த மாணவர்களுக்கு 25 நபர்களுக்கு இலவசமாக பட்டப்படிப்பு படிக்க, வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் நமது சங்க மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை செயற்குழுவிற்கு தெரிவித்துக் கொண்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை
நமது சங்க உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் ஜுன் மாதத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதனடிப்படையில் 178 உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு நடிகர் சங்க சாரிட்டபிள் டிரஸ்ட் வங்கி கணக்கிலிருந்து 8,41,000/- ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் நாடகம் நடந்த தடை இருந்தது. நாடகம் நடத்துவதற்கான ஒப்பந்தம் பெற்று தந்துள்ளோம்.

உறுப்பினர் அல்லாதவர்களுக்கு (Non – Member) வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைத்துவிட்டு உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக வழங்கப்பட்டது.

உறுப்பினர்களின் 10 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த ஊதிய தொகை

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிறந்த மூத்த உறுப்பினர்களை அழைத்து பிறந்தநாள் விழா கொண்டாடியது.

உறுப்பினர்களின் விவரங்களை இணைதளத்தில் பார்க்கும் வசதி

புதிய நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டில் 1 வருடத்திற்கான கணக்கு வழக்குகளை குறித்த நேரத்தில் தணிக்கை செய்யப்பட்டது இதுவே முதன் முறை

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )