.
.

.

Latest Update

பரபரப்பான படப்பிடிப்பில் “ ஒரு மெல்லிய கோடு “


2X7A0752 பல லட்சம் ரூபாய் அரங்கில் அர்ஜுன் – ஷாம் – மனிஷா கொய்ராலா
குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட A.M.R.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு “ ஒரு மெல்லிய கோடு “ என்று பெயரிட்டுள்ளார்.
இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா , ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – இசைஞானி இளையராஜா
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி / ஒளிப்பதிவு – சேதுஸ்ரீராம் / நடனம் – விட்டல்
கலை – ஆனந்தன் / நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
தயாரிப்பு – அக்ஷயா கிரியேசன்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.M.R. ரமேஷ்
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது…இது வழக்கமான படமாக இருக்காது. திரைக்கதையில் இது வேறு ஒரு கோணத்தை உருவாக்கும்.
இந்த படத்திற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லி யில் பல லட்சம் ரூபாய் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டது. தடவயியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது.
சந்தேகப் படும் படியான மரணங்களின் உண்மை நிலையைக் கண்டறிய பிரேதங்களை ஆய்வு செய்யும் அரங்கு அது!
அதில் அர்ஜுன் – ஷாம் – மனிஷா கொய்ராலா ஆகியோர் பங்கேற்க நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
நடிகர் அர்ஜுன்… இது என் சினிமா கேரியரில் புதுசு..இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து அசை போட்டுக் கொள்ள இது போன்று ஒரு படத்தில் நடித்தோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் படியான கதாப்பாத்திரம் பெருமையாக இருக்கு என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles