.
.

.

Latest Update

புதிய முயற்சியாக தயாராகும் “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி“


IMG_3949கேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படத்திற்கு “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகனாக கிரண் மை(பெண் ) நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக ஜீன்ஸ் (ஆண் )நடித்திருக்கிறார்.  மற்றும் தலைவாசல் விஜய்,மகாநதி சங்கர்,ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு   –   பாஸ்கர் .   இசை    –   செல்வா.ஜே.கே

நடனம்    –  மது.ஆர் .      எடிட்டிங்   –   சந்திரகுமார்

தயாரிப்பு நிர்வாகம்   –  ராஜ்பால் .        தயாரிப்பு மேற்பார்வை –  பூபதி

தயாரிப்பு   –   ஜீன்ஸ், பென்னி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ஜீன்ஸ்

படம் பற்றி இயக்குனர் ஜீன்சிடம் கேட்டோம்….   லட்டுக்குள்ள பூந்தி பூந்தி என்றால் லட்டுன்றது உலகம். அந்த உலகத்துல ஆணும், பெண்ணும் பூந்தி பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்தது தான் லட்டு. அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம். இந்த ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவுதான் கதை! அந்த கனவு உலகத்துல ஆண்கள் எல்லோரும் பெண்களா இருக்காங்க. பெண்கள் எல்லோரும் ஆண்களா இருக்காங்க. அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனா அவர்கள் பெண்கள் குணத்தோட மென்மையா, நளினமா இருப்பாங்க.

அதுபோல பெண்கள் எல்லோரும் ஆண்களோட குணத்தோட முரட்டுத் தனமா அடாவடியா இருப்பாங்க.  இப்படி ஆண்களும், பெண்களும் உல்டாவா மாறி இருந்தா எப்படி இருக்கும்ங்கிறதை யாருமே எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான முறையில் சொல்லிருக்கேன். நம்ம பார்த்த, ரசிச்ச, எல்லா விஷயங்களுமே அப்படியே மாறி நடந்தா எப்படி இருக்கும் என்று யோசிச்சு பாருங்க உங்களுக்கே சிரிப்பு வரும்.

இது ஒரு புதுமையான, மிகவும் வித்தியாசமான முயற்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மொத்தம் 2 ½ மணி நேர படமும் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் நடுச்சு இதுவரைக்கும் எந்த படமும் வந்ததில்லை “ லட்டுக்குள்ள பூந்தி பூந்தி “ தான் முதல் படம் .

இது முழுக்க முழுக்க காமெடி படம். படத்தை பார்க்கிற ரசிகர்கள் எல்லோரும் வயிறு புண்ணாகும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க அதுக்கு நான் பொறுப்பு என்று கூறினார் இயக்குனர் ஜீன்ஸ்.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )