.
.

.

Latest Update

மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘பிரம்மோற்சவம்’


maheshbabu43தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி பட நிறுவனமாக விளங்கும், பிவிபி சினிமா படநிறுவனம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், நான் ஈ உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது.
தற்போது கார்த்தி – நாகார்ஜுனா நடிக்கும் படம், ஆர்யா நடிக்கும் இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக் உட்பட பல படங்களைத் தயாரித்து வரும் பிவிபி சினிமா, அடுத்து பிரம்மோற்சவம் என்ற படத்தை பிரம்மாண்டமானமுறையில் தயாரிக்கிறது.
தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். முதன்முறையாக மகேஷ்பாபு நடிக்கும் தமிழ்ப்படம் இது.
ரகுல் பிரீத் சிங், ப்ரணிதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
சத்யராஜ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
மிக்கி மேயர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
பல வெற்றிபடங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
தோட்டாதரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
பிரம்மோற்சவம் படத்தை எழுதி இயக்குகிறார் ஸ்ரீகாந்த் அதலா.
தயாரிப்பு – பேர்ல் வி பொட்லூரி – பரம் வி பொட்லூரி
மியூசிகல் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், குடும்ப உறவுகளின் மகிமையையும்… உன்னதங்களையும்ம் சொல்வதோடு, குடும்ப உறவுகளை எப்படி கொண்டாட வேண்டும், தலைமுறைகளைத்தாண்டி நம் பாரம்பர்யத்தை எப்படி போற்றிப் பாதுகாப்பது என்பதையும் சொல்லும் படம்.
வாழ்க்கையைப் பற்றிய பாசிட்டிவ்வான பார்வையையும் எடுத்துரைக்கும் படமாக உருவாகிறது – பிரம்மோற்சவம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles