.
.

.

Latest Update

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’!



இயக்குனர் மிஷ்கின் சைக்கோ என்ற பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வந்தவுடன் தமிழ் சினிமாவின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதுவும் மேஸ்ட்ரோ இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் ஏற்றி இருக்கிறது.

இயக்குனர் மிஷ்கின் பற்றியும், இந்த படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வியந்து பேசும்போது, “வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணி புரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், அதனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும்? தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரை போலவும் நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

அசாதாரணமான, அதே நேரம் கவனத்தை ஈர்க்கும் நடிகர்கள் பட்டாளத்தை பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறும்போது, “பெரும்பாலான நேரங்களில் நட்சத்திரங்கள் தேர்வு என்பது இயக்குநரின் மனநிலையை பொறுத்து எடுக்கப்படும் முடிவு. ஆனால் மிஷ்கின் சார் விஷயத்தில் இது முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் மற்றும் ராம் ஆகியோர் அவருடைய தேர்வுகள், எங்களுக்கு அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உண்மையில், மிஷ்கின் சார் எங்களை பரிந்துரைக்க சொல்லியிருந்தால் கூட, நாங்களும் அதே பெயர்களை சொல்லியிருப்போம்” என்றார்.

டபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இந்த படம், வழக்கமான மிஷ்கின் பாணியில் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles