.
.

.

எதிர்பார்ப்பை கூட்டியுள்ள அதர்வா – ஹன்சிகா கூட்டணி


ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் ‘Auraa Cinemas’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை ‘டார்லிங்’ பட புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

“ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் சாம் ஆண்டன் என்னிடம் முதல் முறையாக சொன்ன பொழுதே இப்படத்திற்கு கதாநாயகனாக அதர்வா நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என நானும் எனது அணியும் முடிவு செய்தோம். டாப் ஹீரோக்களின் பட்டியலின், இன்னும் பெயரிடப்படாத இப்படம், அதர்வாவை நிச்சயம் கொண்டு போய் சேர்க்கும். இளைஞர்களிடம் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஆதரவும் வரவேற்பும் வியக்கத்தக்கது. இந்த புது ஜோடி வர்த்தக தரப்பிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெரும்” எனக்கூறினார் ‘Auraa Cinemas’ திருமதி காவ்யா வேணுகோபால்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles