.
.

.

காதல் தோல்வி பாடலால் பிரபலமாகும் நயன்தாரா படம்


பொதுவாக காதல் தோல்வி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். காதல் தோல்விக்கு பிறகு கதாநாயகி மீது கதாநாயகனுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் பாடலாக படங்களில் வெளிக்காட்டுவார்கள். இந்த பாணி ரொம்ப காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன சலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது காதல் தோல்விக்கு கதாநாயகியை தாக்காமல், நெருங்கிய நண்பரை திட்டும் பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ‘காதலிக்காதே’ பாடல் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. இது காதல் தோல்விக்கு காரணமாக இருக்கும் ஒரு நண்பனை கதாநாயகன் மனதார திட்டும் பாடலாகும். பாடலின் இந்த சூழ்நிலையும் சுவாரஸ்யமான இசையமைப்பும் இப்பாடலை இளைஞர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டாக்கியுள்ளது. நாளுக்கு நாள் புதிய உயரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையமைப்பில் இப்படம் உருவாகிவருகிறது. அவரது ஹிட் வரிசையில் ‘காதலிக்காதே’ பாடல் இடம் பிடித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரில்லர் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். ‘Cameo Films’ C J ஜெயக்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

“நடிகர்களை தவிர சுவாரஸ்யமான டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல்களே மக்களை திரையரங்கிற்கு வரவைக்கின்றன. எந்த ஒரு பாடலுக்கும் அதன் மையக்கரு மிக முக்கியமானதாகும். இயக்குனர் அஜய் ஞானமுத்துவும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் முற்றிலும் வேறுபட்ட பாணியில் இந்த பாடலை உருவாக்கவேண்டும் என்று தீவிரமாக இருந்ததாலேயே ‘காதலிக்காதே’ பாடல் பிறந்தது” என்று கூறினார் ‘Cameo Fims’ C J ஜெயக்குமார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles