.
.

.

சதை போர்: மரணம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை!


ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாய் விளங்க வேண்டும். குறிப்பாக, அது கலவரங்கள் ஏற்படுகிற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக இருத்தல் வேண்டும்.

ஆனால் அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னாகும்?. கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. நாம் முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் சிரியாவின் இன்றைய நிலைமை, அங்கே சுதந்திரம் என்பதைத் தாண்டி உயிர்வாழ்வதற்கான போராட்டமே மேலோங்கி இருக்கிறது.

அத்தகைய சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஒவியர் A.P.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார். அந்தத் தொடரானது, சிரியா மக்களுக்கான உதவிக் கரங்களுக்கு ஓர் அழைப்பை விடுத்துள்ளது. இந்த சமூகத்தின் ஒரு பகுதி தொலைத்துவிட்ட மனிதாமானம் மற்றும் இரக்ககுணம் போன்றவற்றிற்கான கவன ஈர்ப்பை கேட்டுள்ளது. இவரது ஓவியங்கள் துயரத்தைப் பேசுவதுடன், உடைந்து கிடக்கும் தேசமொன்றினைக் குணப்படுத்தும் முயற்சியில் உதவிக்கான அவசரத் தேவையை அறிவுறுத்துகிறது. அது மட்டுமல்லாமல் , இந்த உலகத்தில் இருத்தலுக்கான மனித இனத்தின் போராட்டத்தினைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles

CLOSE
CLOSE