.
.

.

சினிமாவில் சேருவது எப்படி? மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் எழுதி வெளியாகியிருக்கும் 99-வது நூல்!குமுதம், குங்குமம், ராணி என முன்னணி பத்திரிகைகளுக்காக கமல், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, அனுஷ்கா, ஜெயம் ரவி, இயக்குநர்கள் ஷங்கர், சேரன், பி.சி.ஸ்ரீராம் என நூற்றுக்கணக்கான திரைக் கலைஞர்களை பேட்டியெடுத்து எழுதிய அனுபவமுள்ளவர். சினிமா செய்தியாளராக 25 வருடங்கள் கடந்து இப்போதும் முன்னணி பத்திரிகைகளுக்காக திரைப் பிரபலங்களைப் பேட்டியெடுத்து எழுதிவருபவர்.

📌➡ அவரது எழுத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில், ‘திரையுலகப் பணிகள் என்னென்ன?’, ‘கதை, திரைக்கதை வித்தியாசம் என்ன?’, ‘டைரக்டரின் வேலைகள் என்னென்ன?’ ‘உதவி இயக்குநர் வாய்ப்பு பெறுவது எப்படி?’ ‘உதவி இயக்குநரின் வேலைகள் என்னென்ன?’, ‘பாடல் எழுதும் முறை’, ‘நான்கு வரிகளில் கதை சொல்வதற்கான அவசியம்’ ,’சினிமாவுக்கான கதையை எங்கு எப்படி பதிவு செய்வது ?’ என மொத்தம் 40 தலைப்புகளில் சினிமாவில் சேருவதற்கான, சேர்ந்தபின் ஜெயிப்பதற்கான வழிவகைகள் மிகமிக எளிமையான முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.

📌➡ 41-வது தலைப்பில் நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் , இசையமைப்பாளர்கள் சங்கம் என திரையுலகின் பல்வேறு துறையினருக்கான சங்கங்கள் எங்கெங்கு உள்ளன என்கிற விவரங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன!

📌➡ வெறுமனே தகவல்களைத் தொகுத்துத் தருவதோடு நின்றுவிடாமல் அந்தந்த தகவல்களுக்குத் தொடர்புடைய திரைக்கலைஞர்கள் பலரது அனுபவங்களை மேற்கோள் காட்டியிருப்பது நூலின் தனித்துவம்.

📌➡ ஒரு கட்டுரையில், ‘சினிமாவுக்கான கதையை நான்கு வரிகளில் சொல்லப் பழகிக்கொள்ள வேண்டியது ஏன் ?’ என தன் அனுபவத்திலிருந்து இயக்குநர் பாக்யராஜ் சொல்லியிருக்கிறார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட திரைக்கலைஞர்களின் அனுபவங்களும் உள்ளன. நூல் முழுக்க இப்படி நிறைய…

📌➡ ”சினிமாவைப் பற்றி பல புத்தகங்கள் வந்துவிட்டன. இதுவரை வந்த புத்தகங்கள் எல்லாம் சினிமாவைப் பற்றி, அதன் தொழில்நுட்பம் பற்றி மட்டுமே பேசியிருக்கின்றன. ஆனால், இந்த புத்தகம் சினிமாவில் நுழைவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும், தகுதியோடு இருப்பவர்கள் அதற்கான வாய்ப்புக்காக யார் யாரை அணுகவேண்டும் என்கிற விவரங்களைச் சொல்கிறது” என இந்த புத்தகத்தின் ஆசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அது உண்மை!

↗ விலை: ரூ. 120 /-

↗ வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்
4 / 2, சுந்தரம் தெரு, தி. நகர், சென்னை – 600 017
போன்: 044 – 2431 4347
இ.மெயில்: info@karpagamputhakalayam.com
Website: www.karpagamputhakalayam.com

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles