.
.

.

சிவாஜி கணேசன் சிலை மாற்றம் நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம்


“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசு தீர்மானித்த வேளையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை 12.01.2017 அன்று நேரில் சந்தித்து , தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் அவர்கள் , சிலையை பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்நிலையில் 3.8.2017 அன்று கடற்கரை சாலையில் இருந்து சிலை அகற்றப்பட்டு மணிமண்டப வளாகத்தில் தமிழக அரசு வைத்துள்ளது . இது பற்றி இன்று 13.8.2017 நடந்த நடிகர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் திருஉருவ சிலையை நிறுவ வேண்டும் என்கிற வேண்டுகோளை தீர்மானமாக நிறைவேற்றபட்டு இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைத்து கடிதம் கொடுப்பதென நடிகர் சங்கம் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சிலைக்காக சமூக அமைப்புகளும் திரைத்துறையை சார்ந்த பெப்சி,இயக்குனர் சங்கம் அனைத்தும் குரல் கொடுத்திருப்பதற்க்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது” இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles

CLOSE
CLOSE