.
.

.

தென்னிந்தியதிரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி.தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். 2019-2021 ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நேற்று (10.02.2019) காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.

தேர்தல் அதிகாரிகளாக கவிஞர் திரு.பிறைசூடன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திரு.K.V.கன்னியப்பன், திரு.முனீர் அகமது,திரு.கஸ்தூரி மூர்த்தி கொண்ட நால்வர் குழு தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

பின்னர், திரு.பி.சி.ஸ்ரீராம் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள். அதன் படி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்.

தலைவர் – திரு.P.C.ஸ்ரீராம்

துணை தலைவர்கள் – திரு.A.கார்த்திக் ராஜா
திரு.S.சரவணன்

பொதுச்செயலாளர் – திரு.B.கண்ணன்

துணை செயலாளர்கள் – திரு M.இளவரசு
– திரு. A .ஆரோக்கியதாஸ்
– திரு.U.K.செந்தில் குமார்
பொருளாளர் – திரு.B.பாலமுருகன்

மற்றும் செயற்குழு பதவிக்கு 15 பேர் தேர்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில், தலைவர்.திரு.பி.சி.ஸ்ரீராம், உப தலைவருக்கு போட்டியிட்ட திரு.கார்த்திக் ராஜா, திரு.சரவணன் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles