.
.

.

பேரன்பு ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, சீனா


47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (World Premiere) ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டிப் பிரிவில் தேர்வாகியது.

தற்போது பேரன்பு திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஆக சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக (Asian Premiere) பேரன்பு திரையிடப்பட இருக்கிறது.

படம் முடிவடைந்ததும் World Premiere மற்றும் Asian Premiere-க்கு பிறகு பேரன்பை வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

பேரன்பு திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளி வர இருக்கிறது.

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
பேரன்போடு,
P L தேனப்பன்
ராம்

தயாரிப்பாளர்: P L தேனப்பன் (ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்)
எழுத்து-இயக்கம்: ராம்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
படத்தொகுப்பு: சூர்ய பிரதமன்
கலை: குமார் கங்கப்பன்
நடிகர்கள்: ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் மற்றும் பலர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles