.
.

.

Latest Update

அஜித் படத்தயாரிப்பாளர் பாடகி ஆனார்


இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள்.

இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர். அவர் தற்பொழுது பின்னணி பாடகராக அவதாரம் எடுத்து பாடல்கள் பாடிவருகிறார். அதில் ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். அப்படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ஐஸ்வர்யாவின் குரல் வளத்தை பெரிதளவு பாராட்டியுள்ளனர்.

“எனக்கு ஊக்கமளித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இசையில் பாடியது எனக்கு பெரும் பெருமை. தமிழில் ‘கூட்டன்’ என்ற படத்திலும் பாடியுள்ளேன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எனது உச்சரிப்பு சரியாக இருப்பது பெரும் பலமாக உள்ளது. ‘தொடர்ந்த பயிற்சி திருவினையாக்கும்’ என்பதை நம்பும் நான் பின்னணி பாடகியாக ஒரு முத்திரையை பதிக்க முனைப்போட்டுள்ளேன்” என புன்னகையோடு கூறினார் ஐஸ்வர்யா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles