.
.

.

Latest Update

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “உளிரி“


ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் “ உளிரி “

இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வெங்கட்

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – சாமி கலைக்குமார்

ஸ்டன்ட் – மெட்ரோ மகேஷ்

நடனம் – மது மாலிக்

தயாரிப்பு மேற்பார்வை : A நாகராஜ்

தயாரிப்பு – எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்

எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை – R.ஜெயகாந்தன்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “ உளிரி “ எனும் மீன் இனமே இன்று அழிக்கப் பட்டு விட்டது…அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப் பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரியை.

படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் R.ஜெயகாந்தன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles