.
.

.

Latest Update

இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான் – இயக்குனர் ப்ரியதர்ஷன்


பொதுவாக ஒரு படம் எந்த வகையை சேரும் ,அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘நிமிர்’ என்ற தலைப்பை குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , ” எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் ‘நிமிர்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான் பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு . இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார் தான் ‘நிமிர்’ என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த மகன்-தந்தை உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். ‘நிமிர்’ மிகவும் திருப்திகரமாக வந்துருக்கின்றது. ”

ஏகாம்பரம் ஒளிப்பதிவில், டர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில் , ஐயப்பன் நாயர் M S படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனம் மற்றும் மோகன் தாஸின் கலை இயக்கத்தில் ‘நிமிர்’ உருவாகியுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles