.
.

.

Latest Update

உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்


ஜுட் லினிகர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார் தமிழகத்தை சேர்ந்தவர். இந்த இளம் இசைக்கலைஞர் எப்போதும் இசையைப் பற்றி குழந்தை பருவத்திலிருந்தே ஆர்வத்துடன் இருந்தார். டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் அவர் கல்வி கற்றார். ஜுடின் தந்தையும் ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவர் இசை ஆர்வமும், அறிவும் அங்கிருந்தே வளர்த்துக்கொள்கிறார். தேவாலயத்தில் இசைக்கருவிகள் வாசிப்பது மற்றும் பாடுவது என எப்போது இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஜுட் லினிகர் வளர்ந்தபோது, ​​அவர் ஒரு பியானியவாதி என்று அறிந்து கொண்டார். பள்ளி காலங்களில் அவர் ஒரு keyboard கலைஞராகவும் பாடகராகவும் பள்ளி பாடல் குழுவில் இருந்தார். பள்ளி பருவத்தில் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஜுட், இசை ஆராய்ந்து கற்றறிந்தார். அவர் கணினிகளை கொண்டு இசை அமைத்து, அதை தனது இணையத்தில் (Reverbnation.com) பதிவேற்றம் செய்தார். ‘The G7 Conglomerate’ விளம்பர நிறுவனம், ஜுட் 11’ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, ஜுட் இசையமைக்க முதல் வாய்ப்பை தந்தது. பள்ளி பொது தேர்வு நெருங்கியதால் ஜுட் ஒரு வருடம் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. அவர் சென்னை லயோலா கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார் ஏனினில்

அவரது இசை வாழ்க்கை கைகொடுக்காமல் போனால் பட்டம் கைகொடுக்கட்டும் என எண்ணினார். கல்லூரி பாடல் குழுவில் கலக்கியது மட்டுமில்லாமல், புரோகிராமர் மற்றும் ஆடியோ செயலாக்க தொழில்நுட்பமாக இசை அமைப்பாளர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் பணிபுரிந்தார். அவர் இசையை தீவிரமாக ஒரு தொழிலாக எடுத்துக்கொண்டார். இசைக்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் திரைப்படத் இசை அமைப்பாளராக அடுத்த நிலைக்கு அவரை தூண்டியது, பல போராட்டங்களுக்கு பின்னால்

3 ஆண்டுகள் கழித்தே திரைப்படத்தில் வாய்ப்பு கிட்டியது. 2016 ஆம் ஆண்டு ஜெய் சிநேகம் பிலிம்ஸ் தயாரிக்கும் உறுதிகொள் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக கையெழுத்திட்டு திரைப்பட இசையமைப்பாளராக உருமாறி இருக்கிறார், ஜுட் லினிகர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles