.
.

.

Latest Update

குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!


பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை
டி .என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.

சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக் ஷனா,நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதிஹேமலதா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள்.அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்திக் கண்டு வியந்து போனார்கள்.

நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் ….”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது.மதுமிதாவின் தாய்,தந்தையரின் அயராத ஊக்குவிப்பின் செயலை மிகவும் பாராட்டுகிறேன்.நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம்.அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது.இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரும்…நோய்நொடிகள் வரவே வராது.கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்க பரதம் கைகொடுக்கும்” மதுமிதா பரதக் கலையிலும் ,கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.என்றார்.

நிகச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கும்,மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் மற்றும்
பக்கவாத்தியக்காரர்களுக்கும் மதுமிதாவின் பெற்றோர் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles