.
.

.

Latest Update

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்



தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மகத்தான வளர்ச்சிக்குப் பின்னர், பொதுவெளிக்கு வரும் எந்த ஒரு பொருளும் மக்களிடையே மிகப்பெரிய விவாதத்துக்கு உள்ளாகிறது. தென்னிந்திய சினிமா துறையை உற்று நோக்கினால், தங்கள் விருப்பமான நடிகரின் எந்த ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் வெளியானாலும் அதை ரசிகர்கள் ஃபிரேமுக்கு ஃபிரேம் என்ன உள்ளது என பகுப்பாய்வு செய்து படத்தை பற்றிய தகவல்களை விவாதிக்கிறார்கள். சுவாரஸ்யமாக, இது இயக்குனர்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முக்கிய காரணியாக அமைகிறது. ஒரு சில நாட்களுக்கு முன், பிக் பாஸ் புகழ் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா” என்ற ரொமாண்டிக் காமெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் நடிகர் மஹத் தீவிரமான STR ரசிகராக நடித்திருக்கிறார். அந்த போஸ்டரில் சிம்புவின் கட் அவுட் இருந்தது. வைரலான அந்த போஸ்டரை ரசிகர்கள் பகுப்பாய்வு செய்ததில், வேறு ஒரு தமிழ் சினிமாவின் போஸ்டர் பின்னணியில் இருந்தது தெரிய வந்தது.

ரசிகர்களிடையே ஒருவித குழப்பம் நிலவும் இந்த நிலையில், படத்தின் இயக்குனர் பிரபு ராம்.சி விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, “இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பல பெரிய படங்களின் ரெஃபரன்ஸ் இருக்கும். இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை கவரும் “ஸ்பூஃப்” எங்கள் படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நாங்கள் ஒரு சாதாரண போஸ்டரை கொண்டு வந்திருந்தால், எங்கள் தயாரிப்பானது பொங்கல் பெருவிழாவில் தமிழ் சினிமாவுக்கு அளிக்கப்பட்ட இன்னுமொரு பரிசாக மட்டுமே இருந்திருக்கும். இது பார்வையாளர்களுக்கு ஒரு விஷுவல் பொறியாகும். போஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் வசன பகுதிகளுக்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது, ஒரு பாடல் காட்சிப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. இன்னும் 15 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்” என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles