.
.

.

Latest Update

கே.பாலசந்தரையும் கமலஹாசனையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது – பூரிக்கும் ஜி.எம்.சுந்தர்


கமல்ஹாசன் நடித்து மாபெரும் வெற்றிப்படமாக ஒடிய “புன்னகை மன்னன்” படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் “பெருமைக்குரிய அறிமுகம்” என படத்தின் டைட்டில் கார்டில் ஜி.எம்.சுந்தர் என்று தன்னை அறிமுகபடுத்திய கே.பாலசந்தரையும் கமலஹாசனையும் தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறும் ஜி.எம்.சுந்தர் “பொதுவாக எம்மனசு தங்கம்” படத்தில் மறுபிரவேசம் செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமாருக்மணி, நடிகர்கள் பார்த்திபன், சூரி, இயக்குனர் தளபதி பிரபு, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் என் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்கிறார் ஜி.எம்.சுந்தர். ஊர்த்தலைவராக நடித்துள்ள எனக்கும் நல்ல வரவேற்ப்பை மக்கள் தந்துள்ளனர் என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார் ஜி.எம்.சுந்தர்.
புன்னகை மன்னன், அதர்மம், கிழக்கு கரை, பொண்ணுமனி, நண்பர்கள், கிழக்கும் மேற்கும் உட்பட 50 மேற்ப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஜி.எம்.சுந்தர்.
லெனின் இயக்கத்தில் ஜெயகாந்தன் கதையான “ஊருக்கு நூறு பேர்” என்ற பெயரில் தயாராகி வெளியானது. ஜி.எம்.சுந்தர் கதாநாயகனாக நடித்த இந்த படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

“உருமாற்றம்” என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படமும் தேசிய விருதுக்கு தேர்வானது. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாம் அய்யாவிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருது பெற்றார்.

“பொதுவாக எம்மனசு தங்கம்” வெற்றி படத்தை அடுத்து ஜி.எம்.சுந்தருக்கு கைவசம் நான்கு படங்கள் ஒப்பந்தமாகி உள்ளதாக ஜி.எம்.சுந்தர் மகிழ்வோடு கூறுகிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles