.
.

.

Latest Update

ஜல்லிக்கட்டு, இப்போது ஹாங்காங்கிலும்!


தமிழ் திரைப்படமான, “ஜல்லிக்கட்டு, ஜனவரி 5 – 23, 2017” வின் உலகப் பயண திட்டத்தில், தற்போது, அது கால்பதித்துள்ள இடம் – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரம். அங்குள்ள பிரபல சந்திப்பு முனையான அட்மிரேட்லி அல்லது அம்பரல்லா முனை (Umbrella Square)யில் இந்த படத்தின் சீனமொழி போஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ஹாங்காங் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான இளைஞர் போராட்டமான UMBRERALLA MOVEMENT எனப்படும், “குடை போராட்டம்” நடந்த இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டு, ஹாங்காங்கில், “நியாயமான தேர்தல் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சட்டமறுப்பு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில், அட்மிரேட்லி முனையில் அப்போது கூடிய இளைஞர்களுக்கு தலைவன் என யாரையும் அடையாளம் காட்டும் நிலை இல்லை. யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, தாங்களாகவே ஒன்றாகக்கூடி, அரசுக்கு தனது எதிர்ப்பைக் காட்டிய இளைஞர்களை விரட்ட அப்போது போலிஸார் PEPPER SPRAY எனப்படும், ஒருவகை மிளகாய் பொடியை பயன்படுத்தினர்.

இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இளைஞர்கள் அனைவரும் குடையைப் பயன்படுத்தினார்களே அன்றி, கலைந்து செல்லவோ, திருப்பித் தாக்கவோ இல்லை. செப்டம்பர் மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் டிசம்பர் 15 வரை, கிட்டத்தட்ட 79 நாட்கள் நீடித்தது. இளைஞர்களின் கோரிக்கையை, அரசு ஏற்கும்படி செய்தது. பெருமளவிலான இளைஞர் கூட்டம் வன்முறை வழிகளைத் தவிர்த்து நடத்திய போராட்டம் என்பதால், உலக வரலாற்றில் இது, UMBRELLA MOVEMENT / குடை போராட்டம் என்ற பெயரில் இடம் பிடித்துள்ளது. அந்த போராட்டம் 2014ல் நடைபெற்ற அதே இடத்தில்தான் தற்போது, (நவம்பர் 30 அன்று) இந்த தமிழ் திரைப்படத்தின் போஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“குடை போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில், ஜல்லிக்கட்டு 5-23 2014 தமிழ் திரைப்படத்தின் சீன மொழி போஸ்டர் வெளியிடப்படுவது, அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், அவர்களது போராட்ட உணர்வுக்கும் தரப்படும் மரியாதை என கருதுவதாக, இத்தமிழ் படத்தின் இயக்குனர் சந்தோஷ் கோபால் கூறினார்.

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டமும், தலைமை ஏற்பதாக தனிப்பட்ட யாரையும் அடையாளம் காட்டாத, தன்னெழுச்சியாக நடந்த, வன்முறையற்ற, வெற்றி அடைந்த இளைஞர் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பின்னணியாக வைத்தே இந்த முழு நீள திரைப்படமும் தயாரிக்கப்படுகிறது.

நியூயார்க் நகரத்தின் வால் ஸ்ட்ரீட்-டில், OCCUPY WALLS STREET MOVEMENT எனக் குறிப்பிடப்பட்ட போராட்டம் நடந்த, அதே இடத்தில் இந்த படத்தின் முதல் அறிமுக போஸ்டர் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகின் பல முளைகளில் இதுபோன்ற அமைதி வழி போராட்டங்கள் நடைபெற்ற பல்வேறு இடங்களில் இந்த படத்தின் போஸ்டரை அறிமுகம் செய்வது படக் குழுவினரின் திட்டம்.

இந்த முழு நீளத் திரைப்படத்தை சந்தோஷ் கோபால் இயக்க, அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களாக என். ஜெயபால், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் பங்களிக்கிறார்கள். ரமேஷ் வினாயகம் இசையமைத்திருக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles