.
.

.

Latest Update

ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள ” காற்றின் மொழி “ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது


ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ” மொழி “. இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் “ காற்றின் மொழி “ படத்தில் இணைகிறது. இப்படத்தை பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது.

இப்படத்தின் பூஜை படக்குழுவினர் மங்களகரமாக ஜூன் 4 ( இன்று ) நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு மேலும் சிறப்பு சேர்த்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. அனைத்து நடிகர்களும் இப்படத்துக்குக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளனர்.

இப்படத்தில் விதார்த் , லட்சுமி மஞ்சு , M.S. பாஸ்கர் , மனோபாலா , குமாரவேல் , மோகன் ராமன் , உமா பத்மநாபன் , சீமா தனேஜா , சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இசை A.H. காஷீப் , பாடல் மதன் கார்க்கி , கேமரா மகேஷ் முத்துசாமி , கலை கதிர் , உடை பூர்ணிமா , எடிட்டர் பிரவீன் KL , வசனம் பொன் பார்த்திபன் , PRO ஜான்சன்.

அக்டோபர் 2018 வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles