.
.

.

Latest Update

‘தீர்ப்புகள் விற்கப்படும்’சத்யராஜ் நடிக்கும் புதிய படம்



‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படம் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நமக்கு காட்டும். அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராட இருக்கிறார்.

ஹனிபீ கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் கூறும்போது, “சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக்கூடிய நேர்மறையான சக்தி அவருக்குள் இருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட் அவரை இந்த படத்தில் கோரியது. இயக்குனர் தீரஜ் இந்த கதையை என்னிடம் கூறியபோது, சத்யராஜ் சார் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்பினோம். அனத அளவு ஒரு மெசேஜ் இந்த படத்தில் இருக்கிறது, அதை சொல்லும் அளவுக்கான சக்தி அவருக்கு இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்தை தமிழில் தயாரிக்க விரும்பிய காரணம், இந்த படம் மிகப்பெரிய அளவில் சென்று சேரும் என்று உறுதியாக நம்புவது தான். மேலும், தமிழ்நாடு எப்போதும் சமூக நீதியை நிலை நிறுத்தும். டிசம்பர் மத்தியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம்” என்றார்.

இயக்குனர் தீரன் கூறும்போது, “என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் சாருக்கு நன்றி. ஒரு தைரியமான நடிகரையும் தாண்டி இந்த திரைக்கதை ஒரு தைரியமான தயாரிப்பாளரை கோரியது. சஜீவ் மீராசாஹிப் சார் ஒரு தயாரிப்பாளராகவும், சத்யராஜ் சார் ஒரு ஹீரோவாகவும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர்வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன். எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப்பட்டார் உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை படத்தின் தலைப்பை வெளியிட முடிவு செய்தோம். “கருடவேகா” (தெலுங்கு) புகழ் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் எஸ்.என் (யாமிருக்க பயமே மற்றும் காட்டேரி) இசையமைக்கிறார். எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத் எடிட்டராக அறிமுகமாகிறார். சுரேஷ் கல்லெரி (குட்டி புலி, ஜெயில்) கலை இயக்குனராகவும், நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தீரன் மேலும் கூறும்போது, “தீர்ப்புகள் விற்கப்படும்” உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தை வழங்கும் எங்கள் நோக்கம் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மூலம் தெரிய வரும். இந்த படம் முழுக்க ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் “என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles