.
.

.

Latest Update

நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார் – சார்லி


எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தை தான் நடிகர் சார்லி , சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் செய்துள்ளார். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தும் சார்லி அவர்கள் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும் , எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்’ என்று தான் கூறவேண்டும் ” என்றார் நடிகர் சார்லி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles