.
.

.

Latest Update

பைரசியை எதிர்த்து ”ஹீரோ டாக்கீஸ்”நடத்தும் 24மணி நேர இடைவிடாத நேரலை பிரச்சாரம்


வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பெரும் சேவை செய்யும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவையான ”ஹீரோ டாக்கீஸ்”, ‘ஷூட் தி பைரேட்ஸ்’ என்ற 24 மணி நேரம் இடை விடாத, பைரஸிக்கு எதிரான பிரச்சாரத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி காலை பதினோரு மணிக்கு பிரசாத் லேபிள் தொடங்கவுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பிரச்சாரத்தில் தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல்கள், விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் ஆகியவை சினிமா பிரபலங்களோடும், பிரபலங்கள் தலைமையிலும் நடத்தப்பவுள்ளது. இந்த ”ஷூட் தி பைரேட்ஸ்” நிகழ்வு ”Asia Book Of Records” மற்றும் ” Indian Book Of Records” ஆகியவையால் ”Longest Anti Piracy Campaign” என அடையாளம் காணப்படவுள்ளது.

இந்த காம்பைனில் பல சினிமா சாதனையாளர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ”ஷூட் தி பைரேட்ஸ்” நிகழ்வை ‘மீசைய முறுக்கு” புகழ் RJ விக்னேஷ் தொகுத்து வழங்கவுள்ளார். ஒரு படம் எடுக்க சந்தித்தாகவேண்டிய சிரமங்கள், தமிழ் சினிமாவை எந்த அளவிற்கு பைரசி பாதிக்கின்றது, தயாரிப்பாளர் மற்றும் நுகர்வோர் கண்ணோட்டத்தில் சினிமா வணிகம் எப்படியுள்ளது,பைரசியை தடுக்க தேவையான நடவடிக்கைகள், தமிழ் சினிமாவின் தற்போதய ட்ரெண்ட்டுகள் மற்றும் தமிழ் சினிமா துறையின் டிஜிட்டல் பரிமாணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும், கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் நடத்தப்படவுள்ளன.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles