.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 16.9.2017


16.9.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 31ம்தேதி.
கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி மாலை 4.48 மணி வரைப் பின் துவாதசி திதி.
பூசம் நட்சத்திரம் பின்னிரவு 2.01 மணி வரைப் பின் ஆயில்யம் நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 2.01 மணி வரைப் பின் மரண யோகம்.
ராகுகாலம் காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்ல நேரம்- காலை 7 முதல் 8 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஸர்வைகாதசி.
செறுத்துனை நாயனார் குருபூஜை.
திருக்குருங்குடி ஸ்ரீநம்பி சன்னதியில் உறியடி உத்ஸவம்.
நாளை புரட்டாசி மாதப் பிறப்பு.

16.9.2017 சனிக்கிழமை ராசி பலன்கள்.

மேஷம்: சுகமான நாள். இடம் வாங்கலாம். வீடு கட்டலாம். வாகனம் வாங்கலாம்.

ரிஷபம்: தைரியம் பிறக்கும். செயற்கரிய செயல் செய்வீர்கள். பலரும் உதவிக்கு வருவார்கள்.

மிதுனம்: சுபநிகழ்ச்சி வேலைகள் அதிகரிக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். பெண்கள் ஆசை நிறைவேறும்.

கடகம்: உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை பிறக்கும். பிரயாணம் ஆக்கம் தரும். மன குழப்பத்திர்க்கு இடம் கொடுக்காதீர்கள்.

சிம்மம்: எதிர்பாராமல் பிரயாணம் உருவாக்கும். வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு விசா எடுக்கலாம். செலவு கூடும்.

கன்னி: நிறைய சம்பதிப்பீர்கள். இதுவரை வராத பணம் இன்று வந்துசேரும். சினிமா வாய்ப்பு அமையும்.

துலாம்: பேச்சை குறைத்து செயலை வேகப்படுத்துங்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும். தர்ம காரியம் செய்வீர்கள்.

விருச்சிகம்: திருமணம் கைக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். புதிய சிந்தனை தோன்றும். வரவு வரும்.

தனுசு: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் தடைகளை தாண்ட திரு ஆஞ்ச்னேயருக்கு வடைமலை சாற்றுங்கள்.

மகரம்: மனைவி வழி சொத்துக்களை பெறலாம். புதிய சிந்தனை தோன்றும். நல்ல மனிதர்களைச் சந்திப்போம்.

கும்பம்: வழக்குகள் முடிவுக்கு வரும். தேடிய செல்வம் கைக்குக் கிடைக்கும். புதிய எதிர்பார்ப்பு தோன்றும்.

மீனம்: தெய்வீகம் பலம் வாய்ந்த நாள். நினைத்த காரியம் நிறைவேறும். உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.

நாளைச் சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles