.
.

.

21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு


பேரன்பு திரைப்படம் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) நேற்று (ஜூன் 16-ம் தேதி) திரையிடப்பட்டது.

ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா அரங்கில் நடைபெற்ற முதல் காட்சி சீன பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படம் முடிந்த பின் அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திரையரங்கிற்கு வெளியே காத்திருந்த இயக்குநர் ராம், தங்கமீன்கள் சாதனா மற்றும் தயாரிப்பாளர் P L தேனப்பன் ஆகியோரிடம் பார்வையாளர்கள் தங்கள்
அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

17-ம் தேதி பேரன்பு திரைப்படத்தின் இரண்டாவது காட்சி ஷாங்காய் நகரின் அரோரா இன்டர்நேஷனல் சினிமா அரங்கில் திரையிடப்பட்டது. இக்காட்சிக்குப்பின் திரைப்பட விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்படுள்ள பார்வையாளர்களுடன் பங்குபெறும் கலந்துரையாடல் (Meet the Audience) நிகழ்ச்சியில் இயக்குநர் ராம், தங்கமீன்கள் சாதனா மற்றும் தயாரிப்பாளர் P L தேனப்பன் பங்கேற்கவுள்ளனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles