.
.

.

Latest Update

35 million அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கபட்டுள்ள ஜாக்கிசான் படம்


Golden Eye (1995), Casino Royale (2006), Vertical Limit (2000), The Mask of Zorro (1998), The Legend of Zorro (2005) போன்ற மகத்தான படங்களை இயக்கிய Martin Campbell, 22 வருடங்களுக்கு பிறகு, முன்னாள் James Bond நடிகர் Pierce Brosnan உடன் மீண்டும் இணைந்து, துணைக்கு action hero Jackie Chanயும் சேர்த்துக்கொண்டு உருவாக்கி உள்ள படம்தான், ‘The Foreigner’

1992 ஆம் ஆண்டு, Stephen Leather எழுதிய நாவலான The China Man ஐ தழுவி, David Marconi திரைக்கதை அமைக்க, 35 million அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்க பட்டுள்ள படமிது!பிரிட்டன் மற்றும் சீன தயாரிப்பான இப்படத்தில், Jackie Chan கூட ஒரு கூட்டு தயாரிப்பாளர்!

London ஐ சேர்ந்த தொழில் அதிபர், Quan (Jackie Chan). எதிர்பாராத சூழ்நிலையில், அவரது டீன் ஏஜ் மகள், கடததப்பட்டு கொல்லப்படுகிறாள்! அரசியல் கலந்த தீவிரவாதம்தான் இதற்கு காரணம் என அறியாவரும் Quan, பழி வாங்கும் படலத்தில் இறங்குகிறார்!

மேலும் புலனாய்வு செய்யும் போது, பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரியான Hennessy (Pierce Brosnan) என்பவரை சந்தித்தால், புரியாத சில புதிர்கள் விடுவிக்கபடும் என்பதை உணர்கிறார்!

படம் முழுவதிலும் action காட்சிகளுக்கு குறைவே இல்லை எனலாம்!

படப்பிடிப்பின் போது, Lambeth பாலத்தில் Double-Decker பஸ் ஒன்றில் அமைக்கப்பட்ட சண்டை காட்சியை நிஜம் என நம்பி, கூடியிருந்தவர்கள், காவல் துறையினர் பால் சென்று Complaint செய்ததாக ஒரு தகவல்; தீவிரவாதிகளின் வருகையால் கலவரம் நடப்பதாக!

2011 இல் Martin Campbell ‘Green Lantern’ என்கிற படத்தை இயக்கி இருந்தார். 6 வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது!

Cliff Martinez படத்திற்கு இசை அமைத்துள்ளார். David Tattersall ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles