.
.

.

Latest Update

Y Not ஸ்டுடியோஸ் மற்றும் AP International நிறுவனங்களுடன் படத்தயாரிப்புகளுக்கு கைகோர்க்கும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தரமான படங்களைத் தயாரித்து சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி அமோக வெற்றி பெற்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சசிகாந்தின் Y Not ஸ்டுடியோஸ்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா, இறுதிச் சுற்று, தமிழ் படம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வசூலில் சக்கைப்போடு போட்டன.

சஞ்சய் வத்வாவின் AP International நிறுவனம் மெர்சல், கபாலி, தெறி உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்துள்ளது. மேலும் பல தமிழ் மற்றும் மலையாள படங்களின் உரிமைகளைப் பெற்று சர்வதேச சேடிலைட், விடியோ ஆன் டிமாண்ட், இண்டர்நேட் சேவைகள் உள்ளிட்ட பலவற்றுக்கு படங்களை அளித்துவருகிறது.

தற்போது சசிகாந்தின் Y Not ஸ்டுடியோஸ் மற்றும் சஞ்சய் வத்வாவின் AP International நிறுவனங்களுடன் அனில்.D.அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் சிறந்த தரமான படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு அளிப்பதே எங்களின் தாரகமந்திரம் என்கிறது இந்தக் கூட்டணி.

இந்நிகழ்வைப் பற்றி ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஷிபாசிஷ் சர்கார் கூறுகையில், “இந்தக் கூட்டணியின் மூலமாக ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தென்னிந்தியாவில் தங்களின் பங்கு தரமான திரைப்படங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அதீதமாகவும் இருக்கும். புதிய உத்வேகத்துடன் புதுமைகளை புகுத்தி திரைப்படங்களின் மேன்மைக்கு வழிவகுக்கும் இந்த உன்னதமான கூட்டணி” என்றார்.

Y Not ஸ்டுடியோஸ் சசிகாந்த் கூறுகையில், “எங்கள் நிறுவனம் சஞ்சய் வத்வாவின் AP International மற்றும் அனில்.D.அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுடன் இணைவது பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்தக் கூட்டணியின் மூலம் Y Not ஸ்டுடியோஸின் படங்களும் செயல்திறனும் சர்வதேச நிலைக்கு இட்டுச் செல்லும் என்று உளமார நம்புகிறோம்” என்றார்.

AP International சஞ்சய் வத்வா கூறுகையில், “Y Not ஸ்டுடியோஸின் முதல் படமான “தமிழ் படம்” மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் முதல் படமான “யாவரும் நலம்” படம் முதலே எங்களுடைய நட்பு இவ்விரு நிறுவனங்களுடன் தொடர்ந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் இணைவதில் மகிழ்ச்சி” என்றார்.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களான Y Not ஸ்டுடியோஸ், AP International, ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்தது சினிமா ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles