.
.

.

Latest Update

ஜில் இசைக்கும்!! ஜொள்ளு நடிகருக்கும்!! பத்திகிச்சே ட்விட்டரில் கை-கலப்பு??

pizap.com14346969095741பெருகி வரும் சமுக வலைதளிங்களின் கவர்ச்சி புயலில் நடிகர்,நடிகைகளை-யும் விட்டு வைக்க வில்லை
தனது படங்களை பற்றியும்,தன்னை பற்றியும் செய்திகளையும் இணையதளத்தில் பகிர்-கின்றனர்
அது சில நேரங்களில் கை கலப்பில் முடிகிறது!!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராகவும் வலம் வரத் தொடங்கியிருக்கிறார். இவரது நடிப்பில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், விஜய் நடிக்க அட்லி இயக்கும் புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார் ஜி.வி. இது அவருக்கு 50-வது படமாகும். நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், இசையமைப்பாளர் தேவா தனது 50-வது படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தார் ஜி.வி.

இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், எப்போதும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கும் ஆர்யா, இதை 50-வது படம் என்று ஜி.வி. கூறியதை கிண்டல் பண்ணும் விதமாக, ஏற்கெனவே நீ 65 ஆல்பங்கள் வெளியிட்டு விட்டாயே மச்சான் என்று டுவிட் போட்டுள்ளார்.

இவருடைய இந்த கிண்டலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்யா, நீ அந்த மலை மேல பறந்துபோய் குறிஞ்சிப் பூவை கண்டுபிடிச்சியே, உங்க வீட்டுல கொடுத்திட்டியா? எங்கடா இன்னும் ஊருக்கு திருப்பி இவன் வரலையேன்னு பார்த்தேன். வந்துட்டியா? என பதிலடி கொடுத்துள்ளார்.

ஜி.வி.யின் இந்த பதிலடிக்கு ஆர்யா இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. மேலும், ஜி.வி.யின் பதிலுக்கு பலரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.