Flash Story
“YAANAI THIRUVIZHA”: A CELEBRATION OF TAMIL NADU’S ELEPHANTS
டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”
“2K லவ்ஸ்டோரி” இசை வெளியீட்டு விழா !!
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படக்குழு படவெளியீட்டை முன்னிட்டு ஊடகங்களை சந்தித்தது!
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்
The Mirchi Shiva-starrer has been officially selected for the Rotterdam film festival
‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு
ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் “ஐடென்டிட்டி”
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’

அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு

குளோபல் ஸ்டார் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு: டல்லாஸில் ஒரு வரலாற்றுக் கொண்டாட்டமாக நடைபெற்றுள்ளது

குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின்  பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது.  இந்திய திரை வரலாற்றில்  அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது.

குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார்  ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார்.

டல்லாஸ் ரசிகர்களின் அமோக அன்பு மற்றும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து குளோபல் நட்சத்திரம் ராம் சரண் பேசியதாவது…
“நாங்கள் இந்தியாவை விட்டுப் போகவே இல்லை என்பது போல் இருக்கிறது. அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ் புரம் என்று அழைக்கப்படுகிறது. நான் ஷங்கர் சாரின் படத்தில் நடித்துள்ளேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரை ஒரு தெலுங்குப் படத்தை இயக்கச் சொல்ல வேண்டும் என்று நான் நெடுநாட்களாகக் கனவு கண்டேன், ஆனால் அது நடக்குமென நான் நினைக்கவே இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றிய, இந்த மூன்று வருடமும்  நான் நிறையக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக ஒரு அழகான பயணமாக அமைந்தது. மேலும், “என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டில் சச்சின் எப்படிப்பட்டாரோ, அதே போல் தான் இந்திய சினிமாவுக்கு ஷங்கர் சார். அவர்தான் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குநர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் தனியாக நடித்து வெளியாகும் முதல் படம், என்பது ஒரு சிறப்பு. அதை தில் ராஜு சாரின் பாணியில் சொல்வதென்றால்.. , “உங்களுக்கு எண்ண வேணுமோ, அது எல்லாமும் இருக்கு.’ ராஜு சாருவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.”  என்றவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இயக்குநர் சுகுமாருக்கு நன்றி தெரிவித்த சரண், புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த கொண்டாட்ட நிகழ்வு, தெலுங்கு மாநிலத்தில் இருப்பது  போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக இயக்குநர் சுகுமார் குறிப்பிட்டார். வெளிநாட்டில் வசிக்கும் போது கூட தெலுங்கு சினிமாவுக்கு என்ஆர்ஐ பார்வையாளர்கள் அளிக்கும் மிகப்பெரும் ஆதரவிற்காக அவர் நன்றி தெரிவித்தார். தில் ராஜுவுக்கு என் வாழ்நாளில் நன்றி சொல்ல முடியாது. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கும் காலகட்டத்தில்,  என் முதல் படமான ஆர்யா படத்தில்  அவர் என்னை நம்பினார். ஷங்கர் சாரிடம் தான் என் முதல் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றேன். சிரஞ்சீவி ரசிகனாக இருந்த நான். அவர் ஏன் ஷங்கர் சாருடன் பணிபுரியவில்லை என்று எப்போதும் ஆச்சரியப்பட்டேன், ஆனால் அவர் என்னுடன் படம் செய்கிறார் என்று ராம்சரண் பகிர்ந்துகொண்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.   எஸ்.ஜே.சூர்யா சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் இயக்குநராவதற்கு முன், குஷி  படத்தை எனது ரெஃபரன்ஸ்  படங்களில் ஒன்றாக வைத்திருந்தேன்.  ராம் சரண் பற்றி சுகுமார் மேலும் கூறுகையில், “சரண் எனது சகோதரர் போன்றவர், அவருடன் பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சி தான். சிரஞ்சீவி சாருடன் படத்தைப் பார்த்தேன், அதனால் நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்: முதல் பாதி – அருமை, இடைவெளி – பிளாக்பஸ்டர் மற்றும் பிளாஷ்பேக் எபிசோட் அட்டகாசம். ஷங்கர் சாரின் ஜென்டில்மேன் மற்றும் பாரதியுடு போன்ற படங்களுக்குப் பிறகு, சரணின் இந்த படத்தை மிகவும் ரசித்தேன். ரங்கஸ்தலம் படத்திற்காகத் தேசிய விருதை வென்றார், ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்த பிறகு, இந்த முறை அவர் கண்டிப்பாக மீண்டும் வெல்வார் என்று நான் நம்புகிறேன்.”

தயாரிப்பாளர் தில் ராஜு, தனது 50 வது படத்தை ராம் சரண் மற்றும் ஷங்கர் போன்ற பிரமாண்டங்களுடன் இவ்வளவு பெரிய அளவில் தயாரிப்பது குறித்து, தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். ஷங்கர் சாருடன் எனது பயணம் 1999 ஆம் ஆண்டு ஓகே ஒக்கடு படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது அவரை முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் தனது தயாரிப்பான ஈரம் படத்தைத் தெலுங்கில் வைஷாலியாக வெளியிட என்னை நம்பினார். இப்போது அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது முதல் நேரடியான தெலுங்குப் படமான கேம் சேஞ்சரைத் தயாரிக்க, என்னை நம்பி, எங்கள் பேனரின் இணை இயக்குநர் மூலம், ஷங்கர் எங்களின் கீழ் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிக்க விரும்புவதாகத் தெரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் ராம் சரண் படப்பிடிப்பிலிருந்தபோது, ஷங்கர் சாரின் ஐடியாவைப் பற்றிச் சொன்னேன். இப்படித்தான் எங்களின் இந்த பிரம்மாண்ட படைப்பு துவங்கியது. COVID-19 காரணமாகத் தயாரிப்பு தாமதமானது, ஆனால் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில், பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளோம்.  நான் மொபைலில் இப்படத்தின் ‘Dhop’ பாடலைப் பார்த்தேன், என் கண்களில் கண்ணீர் சுரந்தது. உங்கள் அனைவரையும் இப்படம் மகிழ்விக்கும்.

ராம் சரண் உடனான உறவு குறித்து தில் ராஜு கூறுகையில், “சரண் என்றாலே எனக்கு கல்யாண் சாருதான் நினைவுக்கு வருகிறார். தோலி பிரேமா, குஷி, கப்பர் சிங் போன்ற படங்களை விநியோகித்ததிலிருந்து மெகாஸ்டார் குடும்பத்துடனான எனது பயணம் தொடங்கியது. நான் முன்பு  சங்கராந்தியின் போது வெளியான சரணின், எவடு படத்தைத் தயாரித்தேன். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படம் நம் தெலுங்கு மாநிலங்களின் தற்போதைய நிகழ்வுகளைக் காட்டுகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் துவங்கிய  கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்.

“பாடல் வேணுமா பாட்டு இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, சங்கராந்திகி ஹிட் வேணுமா, ஹிட் இருக்கு” என்று தில் ராஜு தனது டிரேட்மார்க் வைரல் டயலாக் மூலம் மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்வை இவ்வளவு பெரிய அளவில் ஏற்பாடு செய்து மாபெரும் வெற்றியடைய செய்த ராஜேஷ் கல்லேபள்ளிக்கு நன்றி தெரிவித்தார். “

இயக்குநர் ஷங்கர் தனது 30 ஆண்டுகால திரை வாழ்க்கையில் தெலுங்கு ரசிகர்கள் அளித்து வரும்  அன்பிற்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அதன் விளைவுதான் கேம் சேஞ்சர். கடந்த மூன்று தசாப்தங்களாக நான் தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். நான் முன்பு மற்ற ஹீரோக்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்தேன். ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அப்பண்ணாவாக அவர் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.”

ஷங்கர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் பணிபுரியும் பாக்கியத்தைப் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் தமன் கூறுகையில்..,
“சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும். அப்படித்தான் கேம் சேஞ்சரைப் பற்றி நான் உணர்ந்தேன். ராம் சரண் சாரும் ஷங்கர் சாரும் இணையும் இந்த அற்புதமான படத்தில் பணிபுரிவேன் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கேம் சேஞ்சர், பாலய்யா பாபுவின் டாக்கு மகராஜ் மற்றும் ராஜு சாரின் சங்கராந்திகி வஸ்துன்னம். மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராஜேஷ் கல்லேபள்ளி கூறுகையில், “இன்னும் பல இந்நிகழ்ச்சிக்காக வெளியில் காத்திருக்கின்றனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவில் முதல்முறையாக இவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்துகிறோம். தில் ராஜு சார் ஆதரவால்தான் இது சாத்தியமானது.  எங்களுக்காக ஷங்கர் சார், ராம் சரண் மற்றும் அனைத்து முன்னணி நடிகர்களும் வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.

சிறுவயதிலிருந்தே ஷங்கரின் படங்கள் பார்த்து வளர்ந்தவன் என்று இயக்குநர் புச்சி பாபு சனா தெரிவித்தார். “பிதாபுரம் பூர்ணா தியேட்டரில் பாரதியுடு படத்தைப் பார்த்தேன். ஷங்கர் சார் கமர்ஷியல் கோணத்தில் படம் எடுப்பதில் ஜாம்பவான். அவருக்கு நிகராக யாராலும் படம் எடுக்க முடியாது. கேம் சேஞ்சரில் நான்கு காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அவை பிரமாதமாக இருந்தன. ராம் சரண் சார் என்னைப் புரிந்து கொண்டார். என் குருவை இயக்குநராக்கிய  தில் ராஜு அவர்களின் கேம் சேஞ்சர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

பிரபல தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறுகையில், டல்லாஸில் தெலுங்கு திரைப்பட விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. “டல்லாஸுக்கு வருகை தந்த ராம் சரண் இங்குள்ள ரசிகர்கள் மீதான அன்பையும் பாசத்தையும் காட்டுகிறார். இனிமேல், டல்லாஸில் பல திரைப்பட நிகழ்வுகளைப் பார்ப்போம். இந்த நிகழ்வு இந்த டிரெண்டைத் தொடங்கும். சுகுமார் சார் புஷ்பா 2 மூலம் நம்மைப் பெருமைப்படுத்தினார். நாம்  அனைவரும் ஷங்கர் சாரின் ரசிகர்கள் என்பதை இப்பட வெற்றி மூலம் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்துவோம்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பன்முக  நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், “பவன் கல்யாண் அவர்களுக்குக் கதை சொல்ல முதல்முறையாக ஹைதராபாத் வந்தேன். ராம் சரண் மிகவும் உண்மையான ஆத்மா. அவருடைய தொலைபேசி எண்ணை ‘ஆர்.சி-யாக சேமித்து வைத்துள்ளேன். அவர் தான் உண்மையான ராஜா. நடத்தை, நடனம், நடை, நடிப்பு என அனைத்திலும் மன்னன். கேம் சேஞ்சர் நிச்சயமாக அனைவரையும் மகிழ்விக்கும்.”

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி, அமெரிக்காவில் ஒரு தெலுங்கு படத்தின் முதல் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்த டல்லாஸ் தான் சரியான தேர்வு என்று கூறி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். “கேம் சேஞ்சரில் நான் நடித்த கதாபாத்திரம் எனது கேரியரில் சிறந்ததாக இருக்கும். அது எனக்கு ‘கேம் சேஞ்சருக்கு முன்பும் கேம் சேஞ்சருக்குப் பிறகும்’ என்ற படமாக இருக்கும். படத்தில் ராம் சரணின் புதிய பரிமாணத்தை நீங்கள் காண்பீர்கள். அவருடைய அப்பண்ணா கேரக்டரை முழுவதுமாக ரசித்தேன் என்றார்.”

கேம் சேஞ்சர் திரைப்படத்தை, தமிழில் எஸ்விசி மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்தியில் ஏஏ பிலிம்ஸ் அனில் ததானி வெளியிடுகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அரசியல் அதிரடி திரைப்படத்தின்  இசையை சரிகமா வழங்குகிறது.

கேம் சேஞ்சரில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். சு.வெங்கடேசன், விவேக் ஆகியோர் எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். படத்தின் இணை தயாரிப்பாளராக ஹர்ஷித் பணியாற்றியுள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார், எஸ் தமன் இசையமைத்துள்ளார், எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.நரசிம்மராவ் மற்றும் எஸ்.கே.ஜபீர் ஆகியோர் லைன் புரொடியூசர்களாக பணியாற்றியுள்ளனர். அவினாஷ் கொல்லா  மற்றும் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்ட்டின், ஜானி மற்றும் சாண்டி ஆகியோர் நடன அமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்‌ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

Back To Top
CLOSE
CLOSE