Flash Story
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா
பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!
BV Frames தயாரிப்பில் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

நெல்லிமரமும் புனையப்பட்ட கதையும்

ஆதிசங்கரர் சௌந்தர்யா லஹரி ஸ்லோகங்கள் பாடி, வயதான வறுமை நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு தங்க நெல்லிக்கனிகளை கூரையைப் பிரித்து கொட்ட வைத்தார் என்ற நிகழ்வை கூறி, உங்கள் வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால், விரைவில் பணக்காரன் ஆகலாம் என்று பல நபர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன்.

உண்மையில் அந்த நிகழ்வில், தனது வறுமை நிலையிலும் இறை பக்தி கொண்ட ஆதிசங்கரருக்கு, தான் உண்ண எடுத்து வைத்திருந்த நெல்லிக்கனியை மனம்கோணாமல் தானமாக அந்த தம்பதி கொடுத்ததை யாரும் நினைவு கூறியதில்லை. இந்த கதையை கொண்டு நெல்லி மரம் வீட்டில் வையுங்கள் என்றும் அவ்வாறு வளர்த்தால் பல கோடிகளுக்கு அதிபதியாகலாம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜீவன காரகன் எனும் சனி நீச்சமாகும் நட்சத்திரம் பரணி நட்சத்திரமாகும். இதன் விருட்சம் நெல்லி மரம் ஆகும். பரணி நட்சத்திர விருட்சமான நெல்லி மரத்தை பணம் கொடுக்கும் மரம் என நம்பி வீட்டில் (காமௌண்ட் சுவருக்குள்) வைத்து, சுயதொழில், கூட்டுத் தொழில் தொழில் நஷ்டம் அடைந்தவர்கள் அதிகம்.

ஜீவன காரகன் சனி நீச்சம் பெறும் நெல்லி மரத்தை வீட்டில் வைத்தால், சுயதொழில் சிறக்காது. ஆகவே நெல்லிமரம் நெல்லிக்காய் வேண்டுமானால் தரும், பணமெல்லாம் தராது. உழைத்தால் தான் பணம் வரும்.

குறிப்பு – மரம் வளர்க்க கூடாதுனு சொல்லிட்டான்னு யாரும் போர்கொடி தூக்க வேணாம், உங்கள் வீட்டுக்கு வெளியில் அஸ்திவாரத்தை தொடாமல் நெல்லி மரம் வளர்க்கலாம். அதனால் தவறு இல்லை.

Back To Top
CLOSE
CLOSE