இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி உதவி இயக்குனர் பெரோஸ் முகமதுவை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய உள்ளனர். முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் மணமகளும் முஸ்லீமாக மதம் மாறுவதுதான் வழக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதில்லை என விஜயலட்சுமி கூறினார். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறேnம் எனவும் அவர் குறிப்பிட்டார். நடிப்புக்கு முழுக்குப் போட்ட விஜயலட்சுமி படத்தயாரிப்பில் […]
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி சொத்துக்கள் ஜப்தி – வங்கி நடவடிக்கை
சுமார் 15 வருடங்களுக்கு முன்புவரை திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிசந்திரன், விஜயகாந்ந் நடிப்பில் விக்ரமன் இயக்கிய வானத்தைப்போல படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர். தொடர்ந்து விஜய் அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்தும் … ஷங்கர் போன்ற முன்னணி இயக்குநர்களை வைத்தும் படங்களைத் தயாரித்தார். ஆரம்பத்தில் சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்தார் ஆஸ்கார் ரவி. அந்தப்படங்கள் வெற்றியடைந்து லாபத்தைக் கொட்டின. அதன் பிறகு அந்நியன், தசாவதாரம் படங்களை 30 கோடிக்கும் அதிகமாக செலவு […]
படிப்பும் நடிப்பும் இருக்கும் ‘இந்தியா பாகிஸ்தான்’ – சுஷ்மா ராஜ்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் N.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி , மனோபாலா, ஜகன், MS பாஸ்கர் நடிக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.தெலுங்கில் மாயா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா ராஜ், அசப்பில் சின்ன இளம் வயது அனுஷ்கா போலவே இருப்பதால்எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். இவர் தமிழில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமாகிறார். தன்னுடைய முதல் படம் அனுபவத்தை பற்றி கூறுகிறார். “ ‘இந்தியா […]
72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா
‘கிரகணம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். “ ‘யட்சன்’ படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது மற்றும் ‘விழித்திரு’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது. தேதிகள் இல்லாக் காரணத்தால் ஏப்ரல் 18 , 19 என தொடர்ந்து இரண்டு நாட்கள் ‘யட்சன்’ மற்றும் விழித்திரு படங்களுக்கும் இரவு நேரங்களில் ‘ கிரகணம் ‘ படத்திற்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு […]
பாபி சிம்ஹா நடிக்கும் ‘மசாலா படம்’ டீசர் இன்று முதல்
பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ வேகமாக தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. “ மே 1 உழைப்பாளர் தினத்தன்று எங்கள் ‘ மசாலா படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” எனக் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா.
‘ஊழல் பிறப்பு 15.8.1947 – இறப்பு 1.5.2015’ – கப்பார் இஸ் பேக்
தமிழில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வெற்றிப் பெறுவது ஒன்றும் புதிது இல்லை.ஆனால் அந்த ஹிந்தி படம் தமிழ் நாட்டில் வெளி வருவதற்கு முன்னரே இங்கு பெரும் பபரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதுபெரிய விஷயம்தான். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் , ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்து பெரும் வெற்றிப் பெற்ற ‘ரமணா’ ஹிந்தியில் அக்ஷய் குமார் ,ஸ்ருதி ஹாசன் நடிக்க ‘ கப்பார் இஸ் பேக் ‘ என்ற பெயரில் […]
இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர்
அத்தனைக்கும் ஆசைப்படு படம் மூலம் இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி. அவர் முதலில் இயக்கும் படத்துக்கு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸில் பணியாற்றியவர். அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக மாறினார். கங்காருவுக்குப் பிறகு, அடுத்து […]