ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம்
மு.கிருஷ்ண மோகன் அய்யா அவர்கள் சொன்ன சனிபகவான் மூலம் தப்பித்து கொள்ள எளிய முறை பரிகார முறைகள் இதனை படித்து பயன் பெருங்கள்… நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் படிக்கவே சில புண்ணியம் செய்திருக்க வேண்டும் அது நீங்களாகவே ஏன் இருக்க கூடாது இன்று. அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி…….
1: சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி வழிபட்டால் கடுமையான கஷ்டம் தான் வரும் தானியத்தை பொட்டலம் கட்டி எரித்த நபர்களுக்கு பொட்டலம் பொட்டலமாக கஷ்டம் வரும் தானியத்தை துணியில் கட்டி தீயில் எரிய விடும் போது புகைவருவதை நீங்களே பார்க்கலாம் திருநள்ளார் கோவில் சென்றால் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட்டு தீர்த்ததில் குளிக்க கூடாது குளிக்கும் போது சோப்பு , ஷாம்பு போட்டு குளிக்க கூடாது. குளித்த பின்பு ஆடைகளை குளத்தில் விட கூடாது. அதன் பின்பு எள்ளு தீபம் போடகூடாது. குளம் மாசு படிந்து இருப்பதால் குளத்தில் குளிக்காமல் அறையில் கூட குளியுங்கள் குளம் மாசு படாமல் இருக்கும் போது நாங்களே குறிப்பிடுவோம்.
எள்ளு மூலம் தயாரிக்கபட்ட சுத்தமான எண்ணைய் மூலம் தீபம் ஏற்றுங்கள். நல்லெண்ணெயை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் இரும்பு சத்து உணவு வகைகளை சாப்பிடுங்கள்.
நீங்கள் கோவில் சென்ற போது எந்த ஒரு பிராமணர்கள் ஆவது , எந்த ஒரு வடநாட்டினர்களும் எந்த ஒரு ஜெயின் மதத்தினரும் எள்ளு தீபம் போடுவதை பார்த்ததுண்டா? குளத்தில் குளித்தது உண்டா ? சிந்தியுங்கள் தமிழ் மக்களே ஆன்மீகத்தை தவறாக செய்து விட்டு கஷ்டம் வேண்டாம்.
உங்கள் சந்ததியினருக்காவது நமது இந்து ஆன்மீக உண்மைகளை விஞ்ஞான ரீதியாக கற்று தாருங்கள் தயவு செய்து. உடலுக்கு இரும்பு சத்து இல்லை என்றால் என்னவாகும் என்று மருத்துவர்களிடம் கேளுங்கள். அவர்களே கூறுவார்கள். இரும்பு சத்து அதிகமாக நம் பாரத பூமியில் விளையும் முருங்கை கீரை ,முருங்கை காயிலும் தான் உள்ளது. இரும்பு சத்து உணவை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். இதை தவறாது செய்து முடித்தால் உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி