.
.

.

Latest Update

பாற்கடலை பற்றிய புரிதலும்… கடவுளை பற்றிய புரிதலும்…


பாற்கடலை பற்றிய புரிதலும்…
கடவுளை பற்றிய புரிதலும்…

பாற்கடல்-குண்டலினி சக்தி

மேருமலை-முதுகுத்தண்டு

வாசுகிபாம்பு- மூச்சுக்காற்று (உஷ் …உஷ்னு சத்தம் வருதா)

தேவ,அசுரர்-இடகலை,பிங்கலை(நாடி)

ஆமை-ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை

தொண்டைக்குழி-விசுக்தி

விஷ்னு-வாழ்வு

ஆலகாலவிஷம்-கபம்

அமுதம்-நித்ய வாழ்வு
(மரணமில்லா பெருவாழ்வு)

அதாவது முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது.
(இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்)

ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது(நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும் அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

ஆனால் இந்தப்பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும்.(சந்தேகம் இருப்பின் வாசி யோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)

மேலும் சில உருவகங்களின்
விளக்கங்கள்…

ஒரே இறைவன்(இஸ்லாம்)-அத்வைதம்(Oneness)

சக்தி,சிவன்-துவைதம்(Duality)

பிதா,சுதன்,பரிசுத்த ஆவி-விசிஷ்டாதுவைதம்
(கிறித்துவம்)-உருவகம்

சும்மா இருந்தால் சிவம்(Static)
ஓயாமல் அசைந்தால் சக்தி(Dymnamic)
சக்தி இல்லையேல் சிவம் இல்லை-உருவகம்

திரிசூலம்-இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்தி யின் உருவகம்

கணபதியை(பூமி)
சக்தி (Dynamic force)
அழுக்கை(Dust of universe )
உருட்டி படைத்தாள்-இது பூமி தோன்றலின் உருவகம்

தில்லை நடராசர் நடனம்-
Cosmic danceன் உருவகம்
(அறிவியல் ஏற்றுக்கொண்டது)

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்) 636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு உங்கள் அன்பு உள்ளம் கவர்ந்த ஆன்மீக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462

சிவன் (யோக சக்தி),
திருமால் (போகசக்தி)
இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன்-உருவகம்

முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமானமான காலத்தை உணர்த்த மகாகாலன்,அதன் எதிர்பரிமாணம் மகாகாளி-உருவகம்

பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாகபடைத்தது ஜனனமும்,மரணம் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

வாயு மைந்தன் அனுமன்(குரங்கு போன்ற நிலையில்லாதமனம் யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்
-மனத்தின் உருவகம்

கருடாழ்வார்-மூச்சின் உருவகம்

சூரியனின் ஏழு குதிரைகள் நிறப்பிரிகை-VIBGYOR உருவகம்

தசாவதாரம்
பரிணாம வளர்ச்சியின் உருவகம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு தான் உணர்ந்ததை உணர்த்த ,ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை(தத்துவத்தை) உருவகமாக்கி
உணர்த்தினர்.

இந்து சனாதன_தர்மம்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )