.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 1.9.2017


1.9.2017 வெள்ளிக் கிழமை – ராசி பலன்கள்

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 16ம் தேதி
சுக்லப்டசம் (வளர்பிறை) தசமி திதி காலை 8.08 மணி வரைப் பின் ஏகாதசி திதி.
மூலம் நட்சத்திரம் காலை 6.10 மணி வரைப் பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 6.10 மணி வரைப் பின் சித்த யோகம்.
ராகு காலம் காலை 10.30 முதல் 12மணி வரை.
எமகண்டம் மாலை 3 முதல் 4.30 வரை.
நல்ல நேரம் காலை 9 முதல் 10.30 மணி. மாலை 5 முதல் 6 மணி

1.9.2017 ராசி பலன்கள்

மேஷம்: திரு ஆஞ்சனேயரை தரிசனம் செய்து விட்டு பணிகளை தொடங்கலாம். எல்லாம் பாக்கியமும் நிறைவாகக் கிடைக்கும் நாள்.

ரிஷபம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் நாள். காரியங்களைக் கவனமாக கையாளுங்கள். ஸ்ரீ விநாயகர் வழிபாடு நன்மை.

மிதுனம்: நட்புகள் மலரும். மனைவியின் அன்பு கிடைக்கும். திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும்.

கடகம்: வங்கி கடன் கிடைக்கும். நீதிமன்றம் வழக்குகள் இழுத்தடிக்கும். ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசனம் எதிர்ப்புகளை விலக்கும்.

சிம்மம்: குலதெய்வம் வழிபாடுக்கு உகந்த நாள். குழந்தைகள் வழியில் நண்மைகள் நடக்கும். பூர்வீக சொத்துக்களை அடையலாம்.

கன்னி: சினிமா வாய்ப்புகள் நிறைவாகக் கிடைக்கும் வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். கடவுச்சீட்டு எடுக்கலாம்.

துலாம்: முயற்சியால் முன்னேற்றம். பல தடைகளை தாண்டலாம். சகோதரியின் உதவிக் கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் பல நன்மைகள் நடக்கும். டப்பிங் கலைஞர்களுக்கும் வாய்ப்புகள் பிரகாசிக்கும். பணம் வரும் சேமிப்பு கூடும்.

தனுசு: சினிமா கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு அமையும். எதிர்காலம் பிரகாசம்.

மகரம்: சுபசெலவுகள் வரும். பிரயாணம் மூலம் நன்மை. விசா கிடைக்கும் வெளிநாடு செல்லலாம்.

கும்பம்: நல்லா சம்பாதிக்கலாம். காதல் கைகூடும் சகோதரர் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். இனிமையான நாள்.

மீனம்: புதிய தொழில் தொடங்கலாம். வருமான வாய்ப்புகளைப் பெருக்கலாம். கலைகள் பல கற்கலாம்.

மிண்டும் நாளைச் சந்திப்போம்.

– ASTRO THAIVEGAN MARIMUTHU OFFICE CHENNAI TUTICORIN. cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles