18.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 3ம்தேதி.
அம்மாவாசை திதி மதியம் 12.09 மணி வரை பின் சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி.
கேட்டை நட்சத்திரம் காலை 7.44 மணி வரை பின் மூலம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்-0;
ஸ்ரீ ஹனுமத் ஜனனம்.
திருநெல்வேலி விரராகவபுரம் ஸ்ரீவரத ராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ அஞ்சனேயருக்கு புஷ்பாஞ்சலி.
சகல ஸ்ரீ அஞ்சனேயர் ஆலயத்திலும் ஸ்ரீ அஞ்சனேயர் ஜெயந்தி. ராம ராம ராம ராம ராம ராம ராம…………
18.12.2017 திங்கட்கிழமை ராசிபலன்.
மேஷம்: காலை 7.44 மணிக்கு சந்திராஷ்டமம் முடிந்தது. இனிமேல் தடையில்லாமல் காரியம் நடைபெறும். மகிழ்ச்சி நிலவும்.
ரிஷபம்: ஒருவித பயம் கலக்கம் தோன்றும். இன்று காலை 7.44 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ ராம ராம ராம ராம…… என மந்திரம் உச்சரியுங்கள். இனறு ஸ்ரீ அனுமான் ஜயந்தி.
மிதுனம்: அறிவில் மிகுந்தவர்கள். புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி செய்வார்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு அமையும்.
கடகம்: பெண்னை சந்திப்போம். குணநலன் அறிவோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும். எதிர்காலத் திட்டம் தீட்டுவோம்.
சிம்மம்: தங்கம் வைரம் நகைகள் வாங்கி மகிழ்வார்கள். பிடித்தவர்களுக்கு கிப்ட் வாங்கி கொடுப்பீர்கள். விருந்து தூள் பறக்கும்.
கன்னி: கடன்களை அடைத்து விடுவோம் நிம்மதியான வாழ்க்கை ஆரம்பமாகும். பண சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குவோம். எதிர்காலம் உங்கள் கையில்.
துலாம்: எதிர்ப்புக்கள் அடங்கும். உங்கள் நல்ல குணத்தை அறிந்து உறவாட தொடங்குவார்கள். நாமும் பழைய சம்பவங்களை மறப்போம்.
விருச்சிகம்: காலம் கடந்த ஞானே உதயம் என்றாலும் இனிய வாழ்க்கைக்கு வித்திடும். கசப்புக்கள் மறையும் வரவுகள் எதிர்பார்க்கலாம்.
தனுசு: உங்கள் ராசி மூலம் நட்சத்திரத்தில் அவமதித்தார் ஸ்ரீ அனுமான். அஞ்சனா புத்திரர்க்கு வடை மாலை சாற்றுங்கள். எல்லையற்ற இன்பம் கிட்டும்.
மகரம்: மனைவியின் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள். தம்பதியினர் இருவரும் சுற்றுலா சென்று மகிழலாம். கடவுள் அருள் உண்டு.
கும்பம்: குழம்பிய பிரச்சினைகளை தெளிவடைய செய்வீர்கள். உங்கள் மவுசு கூடும். உங்கள் உதவி நாடி பலர் வருவார்கள்.
மீனம்: பெரிய விழாக்களை நடத்தும் பொருப்பு உங்களிடம் கொடுக்கப்படும். பொருப்பு உணர்ந்து செயல்படுவீர். வெற்றி கிட்டும்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.