.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 23.9.2017


23.9.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 7ம்தேதி .
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியைத் திதி மதியம் 12.05 மணி வரை பின் சதுர்த்தி திதி.
ஸ்வாதி நட்சத்திரம் பின்னிரவு 3.41 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 3.41 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 7 முதல் 8 வரை. மாலை 5 முதல் 6 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
நெல்லை கெட்வெல் ஸ்ரீ அஞ்சநேயஸ்வாமி 5008 வடை அலங்காரம்.

23.9.2017 சனிக்கிழமை ராசிபலன்கள்.
மேஷம்: ஆடிப்பாடி மகிழலாம். எல்லோருடைய அன்பும் பாசமும் கிட்டும். புதிய நட்புகள் கைக்கொடுக்கும்.
ரிஷபம்: மன அமைதியை தேடுவீர்கள் எனினும் மனம் தளரமாட்டீர்கள். விருப்பம் நிறைவேறும். கடன் கிடைக்கும்.
மிதுனம்: சிந்தனை செய் மனமே சிந்தனை சிறகைப் பறக்கவிடுவீர்கள். நினைத்த காரியம் நடக்கும்.
கடகம்: கடவுள் மீது நம்பிக்கை வைத்துத் தொடங்கிய செயல் வெற்றி. அதிர்ஷ்டம் அடிக்கும். ஆரோக்கியம் கிட்டும்.
சிம்மம்: அரச பதவி கிட்டும். உங்கள் உதவி பலருக்கும் தேவைப்படும். ஆதாயம் இல்லாவிட்டால் பணியில் தலையிடமாட்டார்கள்.
கன்னி: சந்தோஷ மனநிலை அமையும். குடும்பத்தினர்களைச் சந்தோஷமாக வையுங்கள். நிறைய பணம் வரும்.
துலாம்: தொட்டது துலங்கும். நண்பர்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பீர்கள். காதல் பிறக்கும்.
விருச்சிகம்: தொடரும் உறவுகளால் மகிழ்ச்சி. விருந்தோம்பல் சிறப்பு. இன்ப சுற்றுலா சந்தோஷம் கிடைக்கும்.
தனுசு: தொழில் வருமானம் முயற்சிகள் தொடரும். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவீர். பலரின் உதவிக் கிடைக்கும்.
மகரம்: தொழில் ரகசியத்தை அறிவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் நிறைந்திருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.
கும்பம்: சகலகலாவல்லவர்கள். துணிந்து காரியத்தை முடிப்பார்கள். பரிசு பதவி கிட்டும்.
மீனம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக ஸ்ரீ பைரவரை தரிசனம் செய்யுங்கள். எதிர்பாராமல் பணம் வரும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles