.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 25.2.2018


25.2.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 13ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை தசமி திதி மாலை 5.05 மணி வரை பின் ஏகாதசி திதி.
மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6.57 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்’- 0; நேத்திரம்- 2;
இன்று தசமி திதி வெற்றி கிட்டும் ஞாயிற்றுக்கிழமை.

25.2.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
மேஷம்: நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். பெண் பிள்ளைகளின் செயலால் பெருமை கொள்வார்கள். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் சரியான வாதங்களை எடுத்துவைப்பீர்கள். பெண்கள் ஆடம்பரமாக வாழ்வார்கள். தெய்வ கடாட்சம் கிட்டும்.
மிதுனம்: பணியாளர்கள் எதிர்பாரத்த சுப செய்தி வந்து சேரும். புதிய விஷயங்கள் அறிவதில் ஆர்வம் கொள்வார்கள். சிக்கனமாக வாழ்வீர்கள்.
கடகம்: தக்க நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் சுப செய்தி வரும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்: ஆடம்பரமாக வாழ வோண்டும் என்ற எண்ணம் ஈடேறும். அன்புமிக்கவரை சந்திப்போம். பெண்கள் வழி செலவம் வரும்.
கன்னி: சேமிக்கும் அளவுக்கு லாபம் கிடைக்கும். வீடு வாகனம் வகையில் நன்மை தரும். இஷ்ட தெய்வ வழிபாடு தொடங்கலாம்.
துலாம்: விட்டுக்கொடுத்து குடும்பத்தில் ஒற்றுமை நிழவ செய்வார்கள். அரசு வகையில் அனுகூலமாக அமையும். வேலை வாய்ப்பு தேடிவரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கோட்டை மாரியம்மன் வழிபாடு செய்யுங்கள்.
தனுசு: பிள்ளைகளுக்கு செல்லம் கொடுப்பார்கள். குடும்பத்தினர் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள். திருமணம் யோகம் கூடிவிட்டது.
மகரம்: தொழிலில் ஏற்ற இறக்கங்களை சரி செய்வார்கள். எதிர்பாராமல் பணம் வரும். வங்கி லோன் கிடைக்கும். தொழிலாளர் சங்கம் தலைமை பதவி கிட்டும்.
கும்பம்: சகுனம் பார்த்து செல்லலாம். சுப நிகழ்ச்சி இனிமையாக நடக்கும். முக்கிய சந்திப்பு வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும்.
மீனம்; எதிர்கால மனைவியிடன் செல்போனில் உரையாடல் செய்வார்கள். மகிழ்ச்சியான தருணம். கிடைத்த சந்தர்ப்பங்கள் தெளிவாக பயன்படுத்தி கொள்வார்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles