.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 26.9.2017


26.9.2017 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 10ம்தேதி .
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஷஷ்டி திதி மாலை 4.49 மணி வரை பின் ஸப்தமி திதி.
அனுஷம் நட்சத்திரம் காலை 8.07 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம் – மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம் – 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. இரவு 7 முதல் 8 மணி வரை.
சூலம் – வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்- 1;
ஷஷ்டி விரதம்.

26 9.2017 செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் விலக “ஓம் சிவ ராம் சிவ ஓம்” மந்திரம் 108 முறை பாராயணம் செய்யுங்கள். மந்திரம் தந்திரம் செய்யும்.

ரிஷபம்: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நீங்கள் மனம் வைத்துவிட்டால் எல்லாம் ஜெயம். பணம் பலவழிகளில் வரும்.

மிதுனம்: வரவு எட்டனா செலவு பத்தணா. பிறகு என்ன? கடன் வாங்கவேண்டும். ஸ்ரீ சண்முகரை தரிசனம் செய்யுங்கள் கடன் அடையும்.

கடகம்: உங்கள் மகன் உங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வார். சுகமான நாள். கல்வியில் முதல் மதிப்பெண் கிடைக்கும்.

சிம்மம்: முயன்றதால் சாதித்தோம். ஆமைப்போல் ஓடி வென்றுவிடுவோம். வழக்கில் வெற்றி. திரைப்பட சான்ஸ் தேடி வரும்.

கன்னி: புதிய தேடல் உருவாகும். கூட்டு முயற்சி சகல பலத்தையும் கொடுக்கும். தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.

துலாம்: தொலைந்த பொருள் கிடைக்கும். தங்கம் வாங்குவீர். பெண்கள் தொழில் கல்வி கற்பார்கள்.

விருச்சிகம்: மனம் போன திசையில் பயணம். எல்லாம் நன்மைக்கே. ரியல் எஸ்டேட் நல்ல லாபம் தரும். சொத்துக்கள் வாங்கலாம்.

தனுசு: அசை நாயகியைச் சந்திப்போம். விருந்தால் குதூகலம். நவீன வாகனங்கள் ஓட்டி மகிழலாம்.

மகரம்: புதிய இலக்கை நோக்கிய பயணம். ரகசியத்தை அறிவீர்கள். தனிமனித சாதனை படைப்பீர்கள். தனம் சேரும்.

கும்பம்: நிறைகுடம் ததும்பாது. உங்களுக்கு நிகர் நீங்கள் தான். தொழிலாளர்கள் சங்க தலைமை பதவி கிட்டும். பாராட்டுக்கள் குவியும்.

மீனம்: சிந்தனை செயல் வடிவம் பெரும். வியாபார நண்பர்களைச் சந்திப்போம். புதிய ஒப்பந்தம் உருவாகும். முதல் முயற்சி சிறப்பு.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles