.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 31.1.2018


31.1.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நிறைந்த பௌர்ணமி இரவு 7.18 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி.
பூசம் நட்சத்திரம் மாலை 5.58 மணி வரை பின் அயில்யம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவில் 6 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
தைப்பூசம்.
ஸ்ரீசேத்தனார் குருபூஜை.
பௌர்ணமி விரதம்.
ஸ்ரீசந்திர கிரஹணம்.
இன்று மாலை 5.16 மணிக்கு ஸ்ரீசந்திர கிரஹணம் ஆரம்பித்து இரவில் 8.50 மணிக்கு முடிகிறது. சாந்தி செய்ய வேண்டிய நட்சத்திரங்கள். புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி.
கிரஹணம் நேரத்தில் மந்திரம் பாராயணம் மஹா சிறப்பு.

31.1.2018 புதன்கிழமை ராசிபலன்கள்.
மேஷம்: தொழில் சிறப்பு லாபம் பெருகும். அந்தஸ்து கூடும். ஸ்ரீசண்முகரை தரிசனம் செய்யுங்கள். மாற்றம் உருவாகும்.
ரிஷபம்: பெண் பிடிக்கும். திருமணம் பேசி முடிப்பார்கள். நண்பர்களுடன் சேர்த்து கூட்டு முயற்சி வெற்றியடையும்.
மிதுனம்: வழக்குகள் முடிவுக்கு வரும். பகை விலகும். வெளியூர்களுக்கு பயணம் தொழில் முன்னேற்றம் உருவாகும்.
கடகம்: திடமான நம்பிக்கை செயல் வேகம் என இன்றைய நாள் பரபரப்பாகும். இரவில் நிம்மதியான உறக்கம்.
சிம்மம்: வருமானம் கிடைக்கும் நாள். வெகுநாட்களாக வராத பணம் இன்று வந்து சேரும். வீடு மாறலாம்.
கன்னி: சுபநிகழ்ச்சியில் உறவுகள் ஒன்று கூடி மகிழலாம். தொழில் சிறக்கும் லாபம் தரும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வரும்.
துலாம்: தீர்க்கமான முடிவு எடுப்போம். அதிகம் பேசமாட்டோம். தேவையற்ற நண்பர்களை ஒதுக்கிவிடுவோம்.
விருச்சிகம்: ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். மனதை செம்மையாக்குவோம். ஆனமீக குருவை சந்திப்போம்.
தனுசு; வரவு உண்டு செலவு உண்டு. இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
மகரம்: புதிய தேடல் உருவாகும். நெடுநாள் பகைவர் பகை தீர்ந்து நட்பாக மலரும். புரிதல்கள் உருவாகும் அன்பான நாள்.
கும்பம்: குழப்பம் தீரும். மற்றவர்களுக்கு ஆலேசனை கூறுவிர். அரசியலில் ஈடுபடலாம் நல்ல பதவி கிடைக்கும்.
மீனம்: எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு இன்று தேடி வரும். இனிமையாக பயன்படுத்திகொள்வீர். சந்தோஷம் நிறைந்த நாள். வேலை கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles