.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 4.5.2018


4.5.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 21ம்தேதி.
கிருஷ்ணப் பட்சத்து தேய்பிறை சதுர்த்தி திதி பகல் 11.23 மணி வரை பின் பஞ்சமி திதி.
மூலம் நட்சத்திரம் இரவு 10.41 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 10.41 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 10 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-1: நேத்திரம்-2;
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் நேரம் இரவு 8.12 மணிக்கு.

4.5.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: சந்தோஷம் நிறைந்த ஆன்மீக சுற்றுலா செல்லலாம். ஆலய தரிசனம் மனநிம்மதி தரும். காரியம் நிறைவேறும்.
ரிஷபம்: கடின உழைப்பு உண்டு. வருமானம் கம்மி. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ இராமநாதசுவாமி தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம்: வெற்றி நோக்கிய பயணம் அருமை. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் இனிமை. சினிமா வாய்ப்பு தேடிவரும்.
கடகம்: ஆசையின் எல்லையை தொடுவீர்கள். குடும்பம் அன்பு பாசம் வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
சிம்மம்: கொடுக்கலாம் வாங்கலாம். கணக்கு வழக்குகளில் சரியாக இருப்பீர்கள். எதையும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.
கன்னி: கபட நாடகம் புரிபவர்களை புரிந்து கலைஎடுப்பிர்கள். நல்லவர்களை தேடி நட்பு கொள்வார்கள்.
துலாம்: சிறப்பு பரிசு பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய உத்வேகம் கொண்டு செயல்படுவீர். முன்உதாரனமாக செயல்படுவீர்.
விருச்சிகம்: பார்ட்டி சந்தோஷம் மிகுந்த நாள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி கொள்வீர்கள். பணம் பலவழிகளில் வரும்.
தனுசு: தனமனத்துடன் நடந்து கொள்வீர்கள். உரிய மரியாதை கிடைக்கும். வேலையில் பதவி உயரும்.
மகரம்: வேலையை தூக்கி எறிவோம். புதிய வியாபாரம் தொடங்கலாம் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்: படிக்காதவர்களும் தங்களது வாழ்க்கை அனுபவத்தால் தொழிலில் உயர்த்த அந்தஸ்து வருமானம் உயரும். சமுதாய அந்தஸ்து அடைவார்கள்.
மீனம்: இல்லற சந்தோஷம் அடைவார்கள். வாழ்க்கை துனையுடன் சுற்றுலா சென்று மகிழலாம். செல்வம் சேரும்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles