அப்பாடா இவ்வளவு
திறமைசாலிகளா ?
வியக்குகிறார்கள் கல்யாண் – ஜெயகிருஷ்ணன்
E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு
ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த்,அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜெபின் / இசை – பவன்
பாடல்கள் – கல்யாண், வினோதன் / கலை – பத்மநாபன்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி / எடிட்டிங் – விஜய்
தயாரிப்பு நிர்வாகம் பெருமாள்
கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் – எஸ்.கல்யாண்.
தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன், இயக்குனர் கல்யாண் இருவரும் கூறியதாவது…
எங்கள் படத்தின் தலைப்பு “ கத சொல்லப் போறோம்” கூட்டு குடும்பமாக இருந்த போது தாத்தா – பாட்டி, அம்மா – அப்பா என்று குடும்ப உறவுகள் எல்லாம் அந்தத் தலைமுறைகளுக்கு கதை சொன்னார்கள்.
குடும்ப உறவுகள் வேறுமாதிரியான பாதையாகிப் போனதால் சிறுவர், சிறுமிகளுக்கு யார் கதை சொல்வார்கள் ? அவர்களுக்கு கதை எழுத்து ஆர்வம் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள ஐந்து லட்சம் விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் கொடுத்து மாணவர்களை சிறுகதை எழுதச் சொன்னோம்.
கொடுத்த 20 நாட்களுக்குள் ஏறக்குறைய ஐம்பதாயிரம் சிறுகதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் நிச்சயம் ஒருலட்சம் சிறுகதைகள் வரும் என்று நம்புகிறோம். அதில் சிறந்த கதைகளை தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளோம். என்னைப் போன்ற இயக்குனர்களை அடையாளம் காட்ட நாளைய இயக்குனர்கள் போன்ற களம் இருக்கிற மாதிரி வளரும் தலைமுறை சிந்தனையாளர்களை இனம் காண்பதே எங்கள் லட்சியம் என்றார்கள் இருவரும்.