48 மணிநேரம் இடைவிடாமல்
சண்டைக் காட்சியில் நடித்த புதுமுகம் குரு
“குரு சுக்ரன் “ படத்திற்காக படமானது
குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குமுதவள்ளி ராஜேந்திரன் தயாரிக்கும் படம் “குரு சுக்ரன்”
இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக திரிபுரா, சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ரவிராகுல், சிங்கமுத்து, சண்முகராஜன், ஆடுகளம் நரேன், அருள்மணி, சென்ராயன், சுதாசந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ,அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செல்லத்துரை
இசை – சந்தோஷ் சந்திரபோஸ்
பாடல்கள் – வைரமுத்து / கலை – ஜான்பிரீட்டோ / நடனம் – ரமேஷ்ரெட்டி
ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா / தயாரிப்பு நிர்வாகம் – சின்னமணி
தயாரிப்பு மேற்பார்வை – ஜோதிமணி
தயாரிப்பு – குமுதவள்ளி ராஜேந்திரன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் B.ஆனந்த்.
படம் பற்றி இயக்குனர் ஆனந்திடம் கேட்டோம்….
இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் அறிமுகமாகிறார்கள் இருவருமே ட்வின்ஸ். சமீபத்தில் குரு வில்லன் அருள்மணியுடன் மோதும் ஒரு சண்டைகாட்சி மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அரங்கு அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. 48 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
சினிமா அனுபவம் இல்லாத ஒரு புதுமுகம் 48 மணி நேரம் ஸ்டன்ட் காட்சியில் பங்குபெற்றது ஆச்சர்யமான விஷயம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்கள் இயக்குனர் ஆனந்தும் ஸ்டன்ட் இயக்குனர் மிரட்டல் செல்வாவும். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருகிறது என்றார் ஆனந்த்.