.
.

.

Latest Update

கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் விக்ரம் பிரபு நடிக்கும் “ வெள்ளக்கார துரை “


கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க
எழில் இயக்கத்தில்


ஸ்ரீதிவ்யா நாயகி
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள நிறுவனம் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ். இந் நிறுவனம் முதல் முதலாக தயாரிப்பு துறையில் கால் பதிக்கிறது.
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கு “ வெள்ளக்கார துரை “ என்ற படத்தைத் தயாரிக்கிறது.
கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் – எழிச்சூர் அரவிந்தன்.
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
வைரமுத்து, யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார்.
கலை – ரெமியன்
நடனம் – தினேஷ், தினா
ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன்
எடிட்டிங் – கிஷோர்
தயாரிப்பு நிர்வாகம் – ஜெயராஜ், ரஞ்சித்
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்தாஸ்
இணை இயக்கம் – பாலகணேசன்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.
தயாரிப்பு – அன்பு செழியன்
படம் பற்றி இய்குனரிடம் கேட்டோம்…
ஒரே பிரச்னையில் சிக்கி தவித்த விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா இருவரும் அந்த பிரச்னையிலிருந்து மீண்டு காதலில் சேரும் கதை களம் தான் “ வெள்ளக்கார துரை “ இரண்டு மணி நேரத்திற்கு ரசிகனை திருப்திபடுத்த காமெடி மற்றும் கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம். ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் திரை முழுக்கவே சரவெடி காமெடி இருக்கும்.
துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, பூவெல்லாம் உன் வாசம், பெண்ணின் மனதை தொட்டு, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா போன்ற படங்களைப் போல இதுவும் கமர்ஷியல் பார்முலா படம்தான்.
நல்ல நட்சத்திர நடிகர்கள், தரமான படமெடுக்கும் தயாரிப்பாளர் அன்புசெழியன் திறமையான கலைஞர்களின் கூட்டணியில் “ வெள்ளக்கார துரை “ முத்திரை பதிப்பான் என்றார் இயக்குனர் எழில்.
படப்பிடிப்பு கொடைக்கானல், பாண்டி மற்றும் சென்னை உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles