வில்லத்தனமான கதாப்பாத்திரத்தில்
ரிச்சர்ட் நடிக்கும்
“ சுற்றுலா “
ஜெம் எண்டர்டைன்மென்ட் மூவீஸ் J.ரமேஷ் வழங்க எம்.ஜெயகுமார் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “ சுற்றுலா “ என்று பெயரிட்டுள்ளனர்.
ரிச்சர்ட் ஜானி என்ற வில்லத்தனமான கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லத்தனம் கலந்த கதாநாயகன் வேடம் இது என்றாலும் புதுமையாக இருந்ததால் உடனே ஒத்துக்கொண்டேன் என்கிறார் ரிச்சர்ட். மிதுன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீஜி, அங்கிதா, சாண்ட்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெகன், சிங்கமுத்து, ஜாக், கார்த்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரவிசாமி
சினேகன், விவேகா, அண்ணாமலை பாடல்களுக்கு பரணி இசையமைக்கிறார்.
கலை – மோகன மகேந்திரன்
எடிட்டிங் – ஜி.சசிகுமார்
நடனம் – பாப்பி, அன்வர், சிவாஜி
ஸ்டன்ட் – கஜினி குபேரன்
தயாரிப்பு – வெங்கட்ராம், ரவிகுமார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ராஜேஷ் ஆல்பிரட் .
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….
ஒரே நாளில் நடக்கும் கதை ! மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரவென்று ஓடும் திரைக்கதை மூலம் படமாக்கி இருக்கிறோம். ஜானி என்ற கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் நெகடிவ் வேடம் ஏற்றிருக்கிறார்..அவரது கலையுலக அங்கீகாரத்திற்கு அஸ்திவாரம் போடும் படமகா சுற்றுலா இருக்கும்.
முழுக்க முழுக்க ஊட்டியிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான மாளிகை தினமும் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து படமாக்கினோம்.
அடுத்து என்ன ? அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலப் படத்திற்கு நிகரான திரைக்கதை இதில் இருக்கும் என்றார் இயக்குனர்.